என்று இதனை விளக்கஞ் செய்தலும் காண்க. இவ்வாறன்றித் திருமடந்தை - இலக்குமி என்றுரைப்பது பொருந்தாமை யறிக. அன்றியும், அடியவர்களை அடுத்து வரம்பெறும் நிலையில் உள்ள தேவமாதர்களைச் சிவன் அடியாருக்கு உவமை கூறுதலும் பொருந்தாதென்க. சிவ பூசையில் வடக்கு வாயிலில் பூசிக்கப்படும் மகா லட்சுமி சிவ சத்தி யுருவகமாக அறியப்படுதலும் கருதுக. தாமரைத் தவிசு - உச்சிக்குமேல் உள்ள ஆயிரம் இதழ்த்தாமரையாகிய யோகத்தானம்: "சகஸ்ரதள புட்பமிசை வீற்றிக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத - நாதாந்த சத்தி" (தாயுமானார்) வந்து - முன்னைத் தவ நிலையின் பயனாய் இவ்வுலகில் வந்து. மேல்வரும் பாட்டில் "வந்து பிறந்தருளியபின்" (1719) என்பதும், "மண்ணிலேவந்த பிறவியே" (253) என்றதும் காண்க. பொங்கிய பேர் அழகு மிக - அழகுக்கெல்லா மிருப்பிடமாகிய திருமடந்தையின் அழகாதலின் பேரழகு என்றும், அது மேன்மேலும் பொங்கிய என்றும் அது மேலும் மிக என்றும் மூன் றடைமொழிகளாற் சிறப்பித்தார். "நித்த மணாளர்நிரம்ப வழகியர்" (திருவா) என்ற அழகின் தொகுதி. புனிதவதியார் - அம்மையாருக்குப் பெற்றோர்களால் இடப்பட்ட திருநாமம் அன்பின்றிறத்தால் உலகைத் தூய தாக்குபவர் என்ற காரணக்குறியீடு. ஐந்தெழுத்தாலமைந்ததும் குறிக்க. 2 1719. | வணிகர்பெருங் குலம்விளங்க வந்துபிறந் தருளியபின் அணிகிளர்மெல் லடிதளர்வுற் றசையுநடைப் பருவத்தே பணியணிவார்கழற்கடிமை பழகிவரும் பாங்குபெறத் தணிவில்பெரு மனக்காத றதுமபவரு மொழிபயின்றார். |
3 (இ-ள்.) வணிகர்...பின் - வணிகர்களது பெருங்குலம் விளக்கமடையும்படி இவ்வுலகில் அக்குலத்தில் வந்து அவதரித்த பின்பு; அணி....பருவத்தே - அணிபெருகும் மெல்லிய திருவடிகள் தளர்நடை கற்கும் பருவத்திலே; பணியணிவார்....பெற - பாம்புகளை அணியும் பெருமான் திருவடிகளில் அடிமைக்கண் பழகிவரும் பாங்கு பெறுவதற்கு; தணிவில்....பயின்றார்- அடங்காத மன ஆசை மேலோங்க வரும் மொழிகளைப் பயின்று வருவாராயினர். (வி-ரை.) வணிகர் பெருங்குலம் - "பெருவணிகர்குடி" (1717). குலம் விளங்க - குலவிளக்காக அம்மையார் அவதரித்தருளியமையால் குலமுழுமையும் முன்னும் பின்னும் இப்பெருமை கொண்டு சுட்டியறியத்தக்கதாக விளக்கமுற்றது என்றபடி. "கானவர்குலம் விளங்க" என்றவிடத்துப் போல (662). பிறந்தருளிய - ஒரு சொல் நீர்மைத்தாய்ப் பிறந்த என்ற பொருளில் வந்தது பிறந்து அதனால் உலகுக்கு அருளிய என்ற குறிப்பும்பட நின்றது. அடிதளர்வுற் றசையும் நடைப்பருவம் - தளர்நடைப் பருவம் என்க. பருவத்தே - பாங்கு பெற - காதல் ததும்பவரும் மொழி பயின்றார் என்றது கூட்டிமுடிக்க. காதல் ததும்பியதனால் மொழி பயில்வதும், மொழி பயின்றதனால் அடிமை பழகிவரும் பாங்கும் உளவாயின என்று காரண காரிய முறைப்படக் கொண்டு உரைக்க. மனம் வாக்குக் காயம் மூன்றாலும், பிறந்த முனைநாட்டொடங்கிப் பணி செய்தமை குறித்தது. அதனை அம்முறையிற் கூறாது அணிகிளர் மெல்லடி என அடியினை முதலிற் கூறியது, அம்மையார் இங்கு வந்து பிறந்த செயலினைக் கூறிக்காட்டிய ஆசிரியர், உடனே அவரை அடிவணங்கிப் போற்றல் வேண்டும் என்ற குறிப்புக் காட்டியவாறு. அம்மையா ரடிவணக்கமே |