பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்833

 

அரன்கழல் செல்லுநெறி காட்டுமென்பார்"கழற்கடிமை" என்ற அதனை அடுத்துக் குறிப்பிட்டதும் காண்க.

அணிகிளர் மெல்லடி - என்ற அடைமொழிகள் அவரது திருவடிப் புகழ்ச்சிக் குறிப்பாவன.

பழகி வரும் பாங்குபெறு - முன்னை நிலையிற் பழகி, அப்பழக்கத்துடன் இவ்வுலகில் வரும் அத்தன்மையே தொடர்ச்சி பெற.

தணிவில் பெரும் மனக்காதல் ததும்ப வரும் மொழி - அப்பருவத்தில் அம்மையார்பயின்ற மொழிகள் அவரது திருமனத்தினுள் முன்னரே விளைந்து கிடந்து அடங்காமல் மேலே பொங்கி வழிய, அதனைப் புலப்படுத்தும் மொழி. "பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல், சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்" (அற் - அந் - 1) என்று தொடங்கியருளிய அம்மையாரின் திருவாக்கினை ஆசிரியர்சரித அகச் சான்றாகக் கொண்டு விரித்தருளியபடி கண்டுகொள்க. பின்னர்" வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் பனைந்தசடை, யண்டர்பிரான் றிருவார்த்தை யணைய வரு வனபயின்று" (1721) என்று தொடர்ந்து கூறியதும் இக்கருத்து.

அசையுநடைப் பருவத்தே - பாங்கு பெற காதல் ததும்பவரும் மொழி பயின்றார் - என்றது செங்கீரைப்பருவம் குறித்தது.

பணியணிவார்கழற்கு அடிமை பழகி அம்மையார் திருவந்தாதியில் இறைவர் "பாம்பலங்காரப் பரன்" என்ற இத்தன்மைபற்றிப் பலவிடத்தும் கூறினமை குறிப்பு. "மிகவடா வூர்ந்திடு மாநரகம்" (அற் - அந் - 13); "நஞ்சுமிழு நீணாகத்தானை (மேற்படி 14); "இவ்வாளரவின், சிந்தை யதுதெரிந்து காண்மினோ" (மேற்படி 22); "அக்கயலே தோன்று மரவு" (மேற்படி 26); "அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்" (மேற்படி 27); "பூணாக வொன்று புனைந்து" (மேற்படி 28); "படங்கொ ளணிமிடற்ற பேழ்வா யரவசைத்தான்" (மேற்படி 35); "வார்சடை மேனாகம்" (மேற்படி 36); "மதியை, வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே" (மேற்படி 38); "நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ?" (மேற்படி 42); "அராப்பூண்டுழலு மெம்மானை" (மேற்படி 46); "மதியொன் றில்ல வரா" (மேற்படி 48); "நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன்" (மேற்படி 53); "பணியுறுவார்செஞ்சடை" (மேற்படி 55); "தீய வரவொழியச் செல்கண்டாய்" (மேற்படி 57); "திருமுடிக்கே புக்காவங் காலையே போன்று" (மேற்படி 64); பைத்தாடு நும்மார்பிற் பாம்பு" (மேற்படி 66); "பாம்பு மதியும்" (மேற்படி 67); "நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்" (மேற்படி 75); "சீறி விழித்தூரும் வாளரவும்" (மேற்படி 90); "அங்காந் தனலுமிழு மைவாய நாகத்தாய்" (மேற்படி 99) முதலியவை காண்க.

கழற்கடிமை பழகிவரும் பாங்குபெற வரும் மொழி - பன்னாளும் அடிமைத்திறத்தின் பயின்று பழகி வருதல் வேண்டும்; அதனை விளைத்தற்குரிய மொழிகளையே பயிலுதல் வேண்டும் என்பதாம். "பல்லூழி காலம் பயின்றானை யர்ச்சித்தால், நல்லறிவு சற்றே நகும்" "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" (தேவா) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

3

1720.

பல்பெருநற் கிளையுவப்பப் பயில்பருவச் சிறப்பெல்லாஞ்
செல்வமிகு தந்தையார்திருப்பெருகுஞ் செயல்புரிய
மல்குபெரும் பாராட்டின் வளர்கின்றார்விடையவர்பால்
அல்கியவன் புடனழகின் கொழுந்தெழுவ தெனவளர்வார்;

4

1721.

வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
யண்டர்பிரான் றிருவார்த்தை யணையவரு வனபயின்று