பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்835

 

கீழ் என்றும் இருக்கின்ற பிற் சரித விளைவு காண்க. அல்குதல் - நிலைபெறுதல் "அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால், அதற்குப் வாங்கே செயல்" (குறள்). அல்கிய அன்பு என்றதற்குப் பற்றும் பொருளை யறத்துறந்து சிவபிரானிடத்துத் தாழ்ந்த இயல்போ டுதிக்கு மன்பு என்பர்ஆறுமுகத் தம்பிரானர்.

4

1721. (வி-ரை.) வண்டல் பயில்வன - வண்டல் - சின்னஞ் சிறு மகளிர்விளையாட்டு. பயில்வன எல்லாம் பயிலுங்காற் சொல்லும் மொழிகள் எல்லாம்.

வண்டல்...திருவார்த்தை - பயின்று - "மொழி" (1719) என்றவிடத்து உரைத்தவை பார்க்க. இவை அதனின் முதிர்ந்த மொழிகள் என்பர்திருவார்த்தை என்றார்.

முன்னர்க் கூறியவை மனக் காதல் ததும்ப வெளிவரும் மழலைச்சொற்கள். இங்குக் கூறியவை உட்பொருளைப் புலப்படுத்தும் திருந்திய மொழிகள்.

திருவார்த்தை - திருவாசகத்தின் ஒரு பகுதி இப்பெயர்பூண்டது. ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் - கருணை யளிக்குந் திறம் - ஏடர்களை யெங்குமரண்டு கொண்ட இயல்பு - கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பு - அருள்செய் பெருமை - ஓவிய மங்கையர்தோள்புணரு முரு - கேதங் கெடுத்தென்னை யாண்டருளும் கிடப்பு - என்றிவைகளை அறிவார்எம்பிரா னாவாரே என்ற கருத்துடையவை திருவார்த்தை எனப்பட்டன. "பேசத் திருவார்த்தையிற் பெருநீளம் பெருங்கண்களே" (திருக்கோவை - 109). திருவார்த்தை - சிவன் பெருமைகளும், அடியார்பெருமைகளுமாம். அவை எண்ணிறந்தன. "உடைய மறைப்பிள்ளையார்திருவார்த்தை" (1442); நாவுக்கரச ரெழுந்தருளு நல்ல திருவார்த்தை" (திருஞான - புரா - 493).

திருவார்த்தை - பயின்று - என்றதனால் அரன் வழிபாடும், தொண்டர்வரிற்றொழுது - என்றதனால் அடியார்வழிபாடும் எனச் சைவநெறியின் முடிந்த பொருள்களிரண்டும். பிறந்தநாள் முதலாக அம்மையாரிடத்து விளங்கி முதிர்ந்து விளைந்தன என்றதாம்.

தொண்டர் வரிற்றெழுது - ?மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழு றொண்டர் பாதம்? (அற்-அந்-40) என்று முற்றியதன் முன்ன நிலை.

துணை முலைகள் கொண்ட நுசுப்பு ஒதுங்குபதம் - துணை - இரண்டு. கொண்டு - வளர்ச்சியினால். நுசுப்பு - இடை. ஒதுங்குதல் - (பாரமாற்றாது) துவளுதல். பதம் - பருவம். கொள்கை - கொள்ளுதல், பெறுதல்.

கொள்கை - உடல் வளர்ச்சியியல்பு என்றலுமாம். பெண்மை நலம் முற்றிய உடல் வளர்ச்சி பெற்றனர்என்பதாம்.

தாதியர்போற்ற - போற்றுதல் - வேண்டிய உதவிகள் செய்தல் என்ற பொருளில் வந்தது.

5

1722.

நல்லவென வுறுப்பநூ லவருரைக்கு நலநிரம்பி
மல்குபெரு வனப்புமீக் கூரவரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தி லிவர்கண்மர பினுக்கேற்குந்
தொல்குலத்து வணிகர்மகட் பேசுதற்குத் தொடங்குவார்;

6

1723.

நீடியசீர்க் கடனாகை நிதிபதியென் றுலகின்கட்
பாடுபெறு புகழ்வணிகன் பயந்தகுல மைந்தனுக்குத்
தேடவருந் திருமரபிற் சேயிழையை மகட்பேச
மாடமலி காரைக்கால் வளநகரில் வரவிட்டார்.

7