புரிக என்றார் - இன்ன பெண்ணை இன்ன மணமகனுக்கு இன்ன குலமரபின் முறையின் மணம் செய்ய இசைதல் வேண்டும் என்று மகட் பேசும் மரபு அறிவிக்கப்பட் நயமும் காண்க. மணங் குறித்து - என்பதும் பாடம். 8 1725. | மற்றவனு முறைமையினான் மணமிசைந்து செலவிடச், சென் றுற்றவர்க ளுரைகேட்ட நிதிபதியு முயர்சிறப்புப் பேற்றனன்போ லுவந்துதனிப் பெருமகற்குத் திருமலியுஞ் சுற்றமுடன் களிகூர்ந்து வதுவைவினைத் தொழில்பூண்டான். |
9 (இ-ள்.) மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவிட - "மணம் புரிக" என்றது கேட்ட அந்தத் தனதத்தனும் அவர்கள் கூறியபடி மணம் இசைவது எவ்வகையானும் முறைமையுடைய காரணத்தால் மணம் புரிவதற்கு இசைந்து தனது இசைவினை அறிவித்து அவர்களைப் போகச் செய்ய; சென்று உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும்; அவ்வாறே சென்று சேர்ந்தவர்கள் சொல்லியவற்றை கேட்ட நிதிபதியும் உயர்சிறப்பு....தொழில் பூண்டான் - உயரும் பெருஞ் சிறப்பினைப் பெற்றவன்போல மகிழ்ந்து தன் தனிப் பெரும் மகனுக்குச் செல்வ மிக்க சுற்றத்தாருடன் கூடி மகிழ் சிறந்து மணத்திற்குரிய எல்லாச் செயல்களையும் செய்யலாயினான். (வி-ரை.) மற்று அவனும் மற்று - "புரிக" என்ற உரை கேட்ட அவன் என்று முன்னறி சுட்டுப் பொருளில் வந்தது, அவன் - தனதத்தன். முறைமையினால் - முறைமை என்றது பெண் பெற்றோன் மணம் இசைவதற்கு முன் எண்ணித் துணிய வேண்டிய எல்லா அமைதிகளும் பொருந்தும் தொகுதி குறிக்குமேனும் ஈண்டுக் குலமுறைமை என்றமட்டில் விடுக்க. செலவிட - சென்று மணம் இசைந்த படியினை அறிவிக்கும்படி விடுக்க. உயர்சிறப்புப் பெற்றனன்போல் - உயர்சிறப்பு - மணம் நிகழ்ந்த சிறப்பு பெற்றனன்போல் மண இசைவு கேட்டவுடன் மணமே நிகழ்ந்துவிட்டதுபோல என்க. பெறுபவன்போல என்பது பெற்றவன்போல என்று இறந்த காலத்தாற் கூறியது விரைவுக் குறிப்பு. பெற்றனன்போல் - உண்மையில் இந்தத் திருமணத்தால் நிதிபதி உயரும் சிறப்புத் தான் பெற்றவனாயினும், பின்னர்அதனை இழந்து நீங்கிப் பரமதத்தன் வேறு மணம் செய்துகொள்ள உள்ளவனாதலின் அக்குறிப்புப்படப் போல் என்றார். "செல்வ நல்க, வல்லாளை மணந்துவரு வான்போற்றம் மனைபுகுத" (திருவிளை - புரா - விருத்தகுமார பாலரான படலம் - 14) என்றதுபோலக் காண்க. உவந்து என்றது நிதிபதி அந்நல்வார்த்தை கேட்டதும் தான் தனி மகிழ்ந்ததனையும், களி கூர்ந்துளன்றது அச்செய்தியை ஒட்டிச் சுற்றத்தாருடன் கூடி மகிழ்ந்ததனையும் உணர்த்தின. வதுவை வினைத் தொழில் - கலியாணத்திற்கு வேண்டிய முயற்சிகளும் செயல்களுமாம். அவை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன. தொழில் பூனுதல் - செய்தல். 1726. | மணமிசைந்த நாளோலை செலவிட்டு, மங்கலநாள் அணையவது, வைத்தொழில்க ளானவெலா மமைவித்தே, யிணரலங்கன் மைந்தனையு மணவணியி னெழில்விளக்கிப் பணைமுரச மெழுந்தார்ப்பக் காரைக்காற் பதிபுகுந்தார். |
10 |