(இ-ள்.) மணம் இசைந்த நாளோலை செலவிட்டு - மகட்பெற்றார்மணமிசைந்ததனால் மணநாட் குறித்து மணவோலையைஅனுப்பி; மங்கலநாள் அணைய - மணஞ்செய்நாள்கூட; வதுவை....அமைவித்து - மணச்சடங்கிற்குரிய செயல்கள் எல்லாவற்றையும் பொருந்தும்படி அமைத்து வைத்து; இணர்....விளக்கி - கொத்தாகப் பொருந்திய மலர்மாலையை யுடைய மணமகளையும் மணக்கோலம் புனையும் அணிகளால் அழகு விளங்கச் செய்து; பணை......புகுந்தார்- கூட்டமாகிய மணமுரசு முதலிய இயங்கள் மிக முழங்க மண எழுச்சிபெற எழுந்து காரைக்கால நகரத்தினுட் புகுந்தனர் (நிதிபதியுஞ் சுற்றத்தாரும்.) (வி-ரை.) நாளோலை - மணநாட் குறித்து எழுதும் ஒலை. இது மணமகன் வீட்டார்குறித்து மணமகள் வீட்டாரிடம் அனுப்பப் பெறுவது. "குறித்த நாளோலை விட்டார்" (155); "திருநாளோலை" (திருஞான - புரா - 1171); பார்க்க. செலவிட்டு - மணமகள் வீட்டாரிடம் செல்ல விடுத்து. மங்கலநாள் அணைய - மணஞ்செய் திருநாள் அணித்தாக. இணரலங்கள் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி - மணமகனை மண அணிகளால் அழகு விளங்கச்செய்து. அணியின் - அணியினால். இன் - சரரியை சரரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வந்தது. இணர் - பூங்கொத்து. மலருக்காயது. 158 முதல் 164 பாட்டுக்களும், திருஞானசமபந்த நாயனார்புராணம் 1182 - 1187 பாட்டுக்களும் பிறவும் பார்க்க. இணர் அலங்கல் - வணிகர்க்குரிய அடையாள மாலையாகிய முல்லைமாலை. "திருவடையாள மாலை" (திருஞான - புரா - 1216). எழுந்து - மண எழுச்சியாக எழுந்து. பணை முரசம் ஆர்ப்ப - எழுந்து - புகுந்தார் என்று கூட்டி முடிக்க. பணை தொகுதி; கூட்டம். 10 1727. | அளிமிடைதார்த் தனதத்த னணிமாடத் துட்புகுந்து தெளிதருநூல் விதிவழியே செயன்முறைமை செய்தமைத்துத் தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள். |
11 (இ-ள்.) அளிமிடைதார்....புகுந்து - (அவ்வாறு பதி புகுந்தவர்கள்) வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த தனதத்தனது அழகு பொருந்திய மாடத்தினுள்ளே சேர்ந்து; தெளி....அமைத்து - தெளிவினைத் தரும் நூல்களின் விதித்த படியே மணத்தின்முன் செய்யத்தக்க சமாவர்த்தனம் முதலிய சடங்குகளை யெல்லாம் செய்து முடித்து; தளிரடி....செய்தார்கள் - தளிர்போன்ற திருவடிகளையும் மென்மை பொருந்திய நகையினையும் மயில்போன்ற சாயலினையும் உடைய புனிதவதி யம்மையாரை மாலையணிந்த காளை போன்ற பரமதத்தனுக்குக்களிமகிழ் சுற்றத்தார்போற்றும்படி கலியாணம் செய்வித்தார்கள். (வி-ரை.) (பதி புகுந்தார் - 1726) - மாடத்துட் - புகுந்து - செய்தமைத்துக் - கலியாணம் செய்தார்கள் என்று முடிக்க. (புகுந்தாராகிய) அவர்என எழுவாய் முன் பாட்டினின்றும் வருவிக்க. தெளிதரும் நூல் விதிவழியே - சிவாகமங்களின் விதித்தபடியே. (உள்ள மணச் சடங்குகள்) மயிலைக் காளைக்குக் - கலியாணம் செய்தார்கள் - மயில் - காளை என்பன உவம ஆகுபெயர்கள். மயிலைப்போன்ற சாயலும், காளையைப்போன்ற பெருமிதமும்; உவமைக் குறிப்பு. மயிலைக்கண்டு காளை மருள்வது இயல்பாதல்போல இம்மண |