மகன் பின்னர்மருண்டு அஞ்சி அகலும் பிற்சரிதக் குறிப்பும் காண்க. மயிலும் காளையும் பொருந்தாத உயிர்ச்சாதிகளாதலும், சோதிட வழக்கும் காண்க. செய்தார்கள் - செய்வித்தார்கள். பிறவினைப் பொருளில் வந்தது. களிமகிழ் - ஒரு பொருட் பன்மொழி. தளிரடி - மென்னகை மயில் - இவை அம்மையாரின் இயற்கைச் சிறப்புணர்த்தின. தளிரடி - "அணிகிளர்மெல்லடி" (1719) என்றவிடத் துரைத்தவையும் குறிப்பு. "கிளரொளி மலர்த்தாள்" (1782) என முடிப்பதும் காண்க. நூல் வழி முறையே - என்பதும் பாடம். 11 1728. | மங்கலமா மணவினைகள் முடித்தியல்பின் வைகுநாட் டங்கள்குடிக் கொருபுதல்வி யாதலினாற் றனதததன் பொங்கொலிநீர்நாகையினிற் போகாமே கணவனுடன் அங்கணமர்ந் தினிதிருக்க வணிமாட மருங்கமைத்தான். |
12 (இ-ள்.) மங்கலமாம்.....வைகும்நாள் - மங்கலமாகிய கலியாணச் சடங்குகளையும் அவை பற்றிய பிற செயல்களையும் முடித்து, அதன்பின் இயல்பில் வாழுநாளிலே; தனதத்தன் - தனதத்தனானவன்; தங்கள் குடிக்கு ஒரு புதல்வி ஆதலினால் - தங்கள் குடிக்குப் புனிதவதியார்ஒரே புதல்வியாரானதினாலே; பொங்கு ஒலி நீர்நாகையினிற் போகாமே - (தம்மைப் பிரிந்து) பொங்கும் ஒலியினையுடைய கடற்கரையில் உள்ள நாகப்பட்டினத்துக்குஅவர்போகாமல்; கணவனுடன்......அமைத்தான் - காணவனுடனே அக்காரைக்காற் பதியிலேயே தங்கி இனிதாக இல்வாழ்க்கை வாழ்ந்திருக்க அழகிய மாடத்தினைப் பக்கத்தில் அமைத்தான். (வி-ரை.) மங்கலமாம் மணவினைகள் - கலியாணத்திலும் பின்னும் தொடர்ந்து நிகழவேண்டிய மணச் சடங்குகள். இயல்பின் வைகுதலாவது - சடங்குகளுள் அடங்காது தம்மியல்பில் இல்வாழ்க்கை வாழத் தொடங்குதல். குடிக்கு ஒரு புதல்வி - வேறு ஆண் பெண் மக்களின்றித் தமது குடிக்கு அம்மையார்ஒரே புதல்வியாராக. தங்கள் குடி - சாத்தன் தம்மூர்புகுவன் என்புழிப்போலத் தங்கன் குடி என்பது வேறு முடிபாதலின் பால் வழுவாகாமையுணர்க. கணவனுடன் நாகையினிற் போகாமே என்றும், கணவனுடன் அங்கண் அமர்ந்து என்றும் இருவழியும் கூட்டி உரைக்க இடையில் வைக்கப்பட்டது. இதனால் பெண் எத்துணைச் செல்வமுடையார்மகளாயினும் மணத்தின்பின் கணவனுடன் அவனது ஊரிற்சென்று வாழ்தலே இயல்பென்பதும், அவ்வாறன்றிப் பெற்றோரது ஊரில் தங்குதல் போதிய காரணத்தால் விதிவிலக்காகச் சிறப்பு விதியாலமைதியாக்கப் படுவதென்பதும், அவ்வாறு பெற்றோர்களது ஊரில் இருக்க நேரிடினும் கணவனுடன் தனித்து ஏற்றவாறு தனி வாழ்க்கையாக வாழ்வதே தகுதி என்பதும், பிறவும் அந்நாளின் வழங்கிய நன்மரபு வழக்குகளாக அறிவிக்கப்பட்ட திறம் காண்க. பொங்கு ஒலி நீர்- கடல். அரும்புதல்வி - என்பதும் பாடம். 12 1729. | மகட்கொடையின் மகிழ்சிறக்குங் வரம்பிறனங் கொடுத்ததற்பின், நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பி னிதிபதிதன் குலமகனுந் தகைப்பில்பெருங் காதலினாற் றங்குமனை வளம்பெருக்கி மிகப்புரியுங் கொள்கையினின் மேம்படுதன் மேவினான். |
13 |