பக்கம் எண் :


842திருத்தொண்டர் புராணம்

 

1730. (இ-ள்.) ஆங்கவன்றன்....தாமும் - அந்த மனையகத்தில் அவனுடைய அருமை பெற்ற இல்வாழ்க்கைத் துணைவியாய் அமர்கின்ற பூங்குழலாராகிய புனிதவதியம்மையாரும்; பொருவிடையார்...மிகப் பெருக - பொரு விடையினையுடைய சிவபெருமானது திருவடிகளின்கீழ் மிகுந்த அன்பு பொருந்திய காதல் இடையறாமல் மேன்மேலும் பெருகும்படி; பாங்கில்....பயில்வார்- ஒழுங்கில் வரும் இல்லறத்தின் பண்பு பிறழாமற் பயின்று வருவாராகி;

14

1731. (இ-ள்.) நம்பர்அடியார்அணைந்தால் - சிவனடியார்வந்தணைந் தார்களாகில்; நல்ல திருவமுது அளித்தும் - நல்ல திருவமுதினை அளித்தும்; செம்பொன்னும்...கொடுத்தும் - செம்பொன்னும், நவமணிகளும், செழுமையாகிய துகில்களும் என்ற இவை முதலாயினவற்றைக் கொடுத்தும்; உம்பர்பிரான்....ஒழுகுநாள் - தேவதேவராகிய சிவபெருமான் றிருவடியின்கீழ் வைத்த உணர்வு மேன்மேற் பெருகும்படி ஒழுகி வருகின்ற நாளிலே;

15

1732. (இ-ள்.) வெளிப்படை. தன் அளவில் கொண்ட ஒழுக்க நெயியில் பயில்கின்ற பரமதத்தனிடம் வந்தணைந்த சிலர்அவனுக்கு ஓரிரண்டு மாங்கனிகள் கொடுக்க, அவ்விடத்தில் அவற்றைத்தான் முன்வாங்கிக்கொண்டு, அவர்கள் வேண்டி வந்த காரியங்களை முடித்துக் கொடுத்தே, "இங்கு இக்கனிகளை வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க" என்று சொன்னான்.

16

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன.

1730. (வி-ரை.) இப்பாட்டானும் மேல்வரும் பாட்டானும் புனிதவதி யம்மையாரது மனைவாழ்க்கை நலங்களைக் கூறுகின்றார். திருமணத்தின் பின், இல்லற வாழ்க்கை நலங்கருதித் தனதத்தனார் செயலை ஒரு பாட்டாலும், கணவன் செயலை ஒரு பாட்டாலும் உரைத்த ஆசிரியர், அம்மையாரது செயலின் சிறப்பினை இரண்டு பாட்டுக்களாற் கூறியது, மற்று, அவர்களது செயல்கள் உலகம் பற்றிய நிலையுடன் ஒழிந்தனவாக, அம்மையாரது ஒழுக்கம் சிவச்சார்புபற்றிய உயிரின் உயர்நிலையிற் செலுத்து நெறியாதற் சிறப்பு நோக்கி, உடல் நாயகனாகிய கணவனுடன் வாழ்கின்றதும் நிலையில்லாததுமாகிய உலகநிலை இல்லறத்தை ஒரு பாட்டாலும், அதனின் மேம்பட்டு உயிர்நாயகருடனிருக்கும் பெருவாழ்க்கையை மேல் வேறொரு பாட்டாலும், கூறும் தகுதியும் காண்க. 1765-ல் உரைப்பவை பார்க்க. அன்றியும் அம்மையாரது தூயசரித விளைவுச் சிறப்பு நோக்கி விரித்தபடியுமாம்.

ஆங்கு - "அணிமாட"மாகிய மனையின்கண் - ஆங்கு அமர்கின்ற என்று கூட்டுக.

அரும் இல்வாழ்க்கைத் துணை என்க. வாழ்க்கைத்துணை நலம் என்ற திருக்குறட் பகுதியும் காண்க.

அமர்கின்ற - இருக்கின்ற என்றும், விரும்பப்பெறுகின்ற என்றும் உரைக்க நின்றது. அமர்தல் - விரும்புதல்.

அவர்தாமும் - தனதத்தனும் பரமதத்தனும் மேற்கூறியபடி நிகழ, அம்மையாரும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம்.

பொருவிடையார்- விடை - கொடியும் ஊர்தியும் குறித்தது.

அன்புறுகாதல் - ஒழிவின்றி மிகப் பெருகப் பாங்கில் வரும் மனையறத்தின் பண்பு - கணவனாகிய பரமதத்தன் "மனைவளம் பெருக்கி மிகப்புரியும் கொள்கையினின் மேம்பட்டான்"; மனைவியாரும் இல்லறத்தில் "காதலிருவர்கருத்தொருமித், தாதரவு, பட்டதே யின்பம்" என்றபடி அதுபோலவே ஒன்று அநேகமாக மிகச் செய்து விளைத்தல் வேண்டும் என்றபடி மனையறத்தின் பாங்கு வழாமைத்