பக்கம் எண் :


844திருத்தொண்டர் புராணம்

 

அமுது அளித்தும் - வேண்டுவ கொடுத்தும் - அளியினால் அமுது தரப்படுதலின் அளித்து என்ற சொல்லானும், அடியார்தமக்காகவன்றி அவர்பால் வேண்டுவார்க்காகத் தரப்படுதலின் கொடுத்து என்ற சொல்லானும் கூறிய தகுதி கண்டு கொள்க.

அளித்தும் - கொடுத்தும் - உணர்வுமிக - ஒன்றுகொடுத்துப் பிறிதொன்றினைக் கொள்வது வாணிபம். இங்குஅம்மையார் அமுதினையும் பொன் முதலாயினவற்றையும் கொடுத்து, உணர்வு மிகுதல் என்ற பொருளைக் கொண்டனர்என்றுஅவரது மரபு பற்றிய குறிப்புப்படக் கூறிய நயமும் காண்க. மிகப் புரியும் - (129) என்றும், மிகப் பெருக (1730) என்றும் கூறியதற்கேற்ப மிக என்றார். "தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னை" என்ற திருவாசகம் இங்குக் கருதத்தக்கது. "கோவணங் கொடுப்பனென் றுலகின்மே னாளுஞ் சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ" (527) என்றவிடத் துரைத்தவையும் காண்க.

அளித்தும் - கொடுத்தும் - மிக - திருவடிக்கீழ்க் காதல் மிகப் பெருக. மனையறத்தின் பண்பு வழாமைப் பயின்றது (1730) எவ்வாறெனின் அணைந்தால் - அளித்தும் - கொடுத்தும் வந்ததனால் கருதியபடி மிகுவதாயிற்று என்றவாறு.

திருவடிக்கீழ் உணர்வு மிகுதலாகிய காரியம், அடியார்க்கமுதும், பொன் முதலியனவும் தருதலாகிய காரணமொன்றானே விளைவதாம் என்ற ஞானசாத்திர முடிபாகிய உண்மை விளக்கப்பட்டதும் காண்க.

மிக ஒழுகுநாள் - இயம்பினான் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. இவ்வொழுக்கமே அம்மையாரது மனையினுள்ளே பின்னாப் பரமனார்திருத்தொண்டரை அணைவித்ததும், மாங்கனியின் நிகழ்ச்சியினை விளைவித்ததும் அதனைத் தொடர்ந்து போந்த சரித விளைவுகளால் இறுதியில் "சேவடிக்கீழ் என்று மிருக்கும்" (178) பேறு பெறுவித்ததுமாம், என்ற குறிப்புப்பெற்ற ஒழுகுநாள் என்று குளகம்பெறக் கூறியதுமன்றி, மாங்கனிகளின் வரவோடு முடிக்க வைத்ததுமாகிய நயமும் காண்க.

1732. (வி-ரை.) பங்குடைய நெறி - இங்கு இல்வாழ்க்கைப் பாங்கும் வணிக மரபுத் தொழின்முறைப் பாங்கும் கொண்ட நெறி குறித்து நின்றது.

ஒர் இரண்டு மாங்கனிகள் - என்க. ஓர் - ஒப்பற்ற என்றும், நினைக்கத் தக்க என்றும் பிற்சரித நிகழ்ச்சிக் குறிப்புப்பட உரைக்க நின்றது. இரண்டு என்னாது ஓர்இரண்டு என்றது அவை யிரண்டும் ஒன்றுபோலன்றி, ஒன்று கணவனுக்கும் மற்றொன்று அடியாருக்குமாக, ஒன்றொன்று வெவ்வேறு திறம்பட நின்றனவாகி வெவ்வேறாகிய ஒவ்வோர்திறமுடைய இரண்டு என்றுரைக்கவும் நின்றது அவற்றுள் ஒன்று ஒருமுறை அடியாருக்கும் ஒருமுறை கணவனுக்கும் உணவாய் நின்றதன்றி மறுமுறை திருவருட் சான்றாகவும் வந்ததோர்நிலையும் குறிப்பு.

ஆங்கு அவைதான் முன் வாங்கி - ஆங்கு மனையிடத்தன்றி வாணிபம் செய்யும் தொழிலிடத்தில் முன் வாங்கி - வந்தணைந்தவராகிய அவர்கொடுப்ப, அவர்கொடுக்கு முன்பே அன்புடன் வாங்கி. முன் வாங்குதல் - அதனை ஏற்கும் முறையால் அன்பினை வெளிப்படுக்தும் செயல் என்க. அவற்றை இல்லத்துப் பின்னர் அம்மையார் கைக்கொண்டு வாங்கி வைப்பாராதலின் (1733) பரமதத்தன் முன் வாங்கினான் என்றதுமாம். தான் என்ற குறிப்புமது. பின் அதிசயித்து வாங்குவா (1746) னாதலின், இங்கு அந்நிலை பின்னர்ப் பெற முன் வாங்கினான் என்ற குறிப்புமாம்.

வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே - கனி கொடுத்தார்ஒரு குறையினை வேண்டிப் பரமதத்தனிடம் வந்தனர்என்பதாம். குறை - இன்றியமையாது வேண்டும் காரியம். குறை அவித்தல் - குறை நீக்கி நிறைவாக்கிக் கொடுத்தல் அளித்தல் - அன்புடன் செய்தல் குறித்தது. பெரியோரிடமும் அரசர் முதலான