னோரிடத்தும் தெய்வத்திடத்தும் ஒருகுறை வேண்டினார்பழம் முதலிய கையுறை கொண்டு சென்று வைத்துக் கண்டுகொள்வது வழக்கு. "ஈங்கு இவற்றை இல்லத்துக் கொடுக்க" - இது தன் ஏவலரிடம் பரமதத்தன் கூறியது. என இயம்பிக் கனிகளை இல்லத்துக்கு அனுப்பினான் என விரித்துரைக்க. ஈங்கு - தொழிலிடமாகிய இங்கு நின்றும். தொழிலிடம் வேறு; மனையிடம் வேறு ஆகும் மரபும் காண்க. இயம்பினான் - வந்தணைந்து மாங்கனி கொடுத்த அவர்களிடமே இயம்பினான் என்றுரைத்து அவ்வாறு அவர்கள் கொடுப்பப் பின்னர்அம்மையாரும் வாங்கிய படியால் முன் வாங்கி என்றுரைப்போருமுண்டு. 16 1733. | கணவன்றான் வரவிடுத்த கனியிரண்டும் கைக்கொண்டு மணமலியு மலர்க்கூந்தன் மாதரார்வைத்ததற்பின், பணவரவம் புனைந்தருளும் பரமனார்திருத்தொண்டர் உணவின்மிகு வேட்கையினா லொருவர்மனை யுட்புகுந்தார். |
17 (இ-ள்.) கணவன்றான்.....வைத்ததற்பின் - அவ்வாறு கணவன் அனுப்பிய இரண்டு கனிகளையும் கையிற் பெற்றுக்கொண்டு மணம் பொருந்திய மலர்க்கூந்தலினையுடைய அம்மையார்இல்லத்தில் வைத்ததன் பின்பு; பண அரவம்.....புகுந்தார்- படத்தினையுடைய பாம்புகளை அணிந்தருளும் சிவபெருமான் திருத்தொண்டர்உணவில் மிக்க விருப்புடன் ஒருவர்திருமனையினுள்ளே புகுந்தனர். (வி-ரை.) இப்பாட்டு முன்னிரண்டடிகளில் ஒரு தொடர்பும், பின் இரண்டடிகளில் வேறு ஒரு தொடர்புமாகக் கொண்டு நிற்பது குறிக்க. வரவிடுத்த கனியிரண்டும் கைக்கொண்டு - "இல்லத்துக் கொடுக்கவென இயம்பினான்" என முன் பாட்டில் முடித்தபடி அவ்வாறு விடுத்த என்க. மணமலியும் மலர்க்கூந்தல் - பூஙு்குழலார்(1730); மணம் - இங்கு இயற்கை மணம் குறித்தது. மணமலியும்...வைத்ததற்பின் - இவ்வடி முற்றுமோனை. அம்மையார்"பாங்கில்வரு மனையறத்தின் பண்புவழா மையிற்பயின்ற" உலக இல்லற வியல் இதனோடு முற்றுப் பெறுகின்றது; இனி இத்தொடர்பினின்றும் "திருவடிக்கீழ் உணர்வு மிக" நிற்கும் சிவச்சார்பாகிய திருத்தொண்டி னியல் மேல்வருவதாகும் என்று குறிக்க இவ்விரண்டு ஒவ்வோர்பாதியாக இவ்வொருபாட்டிற் சேரத்தொடுத்ததுமன்றி, முன்னைய உலகவியல் முற்றியநிலை காட்டுவார்முற்றுமோனை தந்தும் ஓதினார். அதனோடமையாது பின் என்ற சொல்லாற்றலால் மேற் சரித வியல்பின் றொடக்கத்தையும் குறித்த நயமும் காண்க. பரமனார் திருத்தொண்டர் - "நம்பரடியார்" (1731) என்ற விடத்துரைத் தவை பார்க்க. பரமனாரே திருத்தொண்டரென வந்து புகுந்தார்என்ற குறிப்பும் காண்க. "விடையவன்ற னடியாரே, பெறலரிய விருந்தானாற் பேரிதன்மே லில்லையெனு"ம் (1735) மெய்யறிவுடன் அவரை ஊட்டுவித்தபடியே உண்ணின்று உண்டவர்பரமனாரேயாம். ஆதலினன்றே அவருண்ட மாங்கனி மீண்டும் அதிமதுரக் கனியாக வந்து கிடைத்ததுமன்றி மேலும் சான்று பகர்தற்காக வந்ததாகும். உணவின் மிகுவேட்கை - மிக்க பசி, பசியின்றியே பலமுறையும் உணவு உட்கொள்ளுதலும், மீதூண் விருப்பத்தினால் உணவுண்ணுதலும் உடல் நலத்திற்கும் ஆயுள் பெருக்கத்திற்கும் மாறான தீயொழுக்கங்கள். முற்றப் பசித்த பின்பு உண்ணுதலே முந்தையோர்முறையாதலின் இங்கு உணவின்மிகு வேட்கை |