பக்கம் எண் :


846திருத்தொண்டர் புராணம்

 

என்றதனால் மிக்க பசி உணர்த்தப்பட்டது. இதனை உணர்ந்தே அம்மையாரும் "மெய்த் தொண்டர்நிலை கண்டு பசி தீர்ப்பேன்" என்று, கறியமுதங் குதவாத போதும் திருவமுதினைக் கனியுடன் ஊட்டினார்என்க.

ஒருவர் மனையுட் புகுந்தார் - தொண்டர்ஒருவர்என்றும், ஒருவரது (அம்மையாரது) மனை என்றும் உரைக்க நின்றது. கணவனார்வாணிபத் தொழில் செய் இடத்தில் இருக்கத் தனித்து ஒருவராய் அம்மையார்இருந்தார்என்றதும் காண்க. "மாதரார்தாமிருந்த இடவகையிற் றனிபுகுதோம்" (சிறுத் - புரா - 38) என்று சிறுத்தொண்டர் மனையினில்லாது தனித்துத் திருவெண்காட்டு நங்கையார் இருந்த மனையினுள் தனி புகுதோம் என்று உத்தராபதியாராகி வந்த இறைவர் மறுத்தது விதியாயிருப்பவும், இங்குப் பரமனார்திருத்தொண்டர்ஒரு மனையுட் புகுந்த தென்னையோ? வெனின், உணவின் மிகுவேட்கையால் "பத்தும் பசி வந்திடப்பறந்து போம்" என்ற நீதியின் பாங்கு அறிவிக்க என்க. அன்றியும், அம்மையார் பரமனார்க்குத் தாயாகிய அம்மை எனப் பெறும் தன்மையினால் தாயினிடத்துப் போலப் புகுதல் புகுந்தமையால் அந்நியதியின் மாறுபாடின்று என்பதும் பெறப்படும். விருத்தம் குமாரபாலரான திருவிளையாடலுங் காண்க.

17

1734.

 வேதங்கண் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர்நிலைகண்டு
"நாதன்ற னடியாரைப் பசிதீர்ப்பே" னெனநண்ணிப்
 பாதங்கள் விளக்கநீர்முன்னளித்துப், பரிகலம்வைத்
 தேதந்தீர்நல்விருந்தா வின்னடிசி லூட்டுவார்,

18

1735.

கறியமுதங் குதவாதே திருவமுது கைகூட,
வெறிமலர்மேற் றிருவனையார்"விடையவன்ற னடியாரே
பெறலரிய விருந்தானாற் பேறிதன்மே லில்லை"யெனும்
அறிவினரா, யவரமுது செய்வதனுக் காதரிப்பார்,

19

1736.

இல்லாளன் "வைக்க" வெனத் தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிக ளிரண்டினிலொன் றைக்கொண்டு,
வல்விரைந்து வந்தணைந்து, படைத்து,மன மகிழ்ச்சியினால்
அல்லறீர்ப் பவரடியார்தமையமுது செய்வித்தார்.

20

1734. (இ-ள்.) வெளிப்படை. வேதங்களைச் சொல்லியருளிய பெருமானுடைய மெய்த்தொண்டரது மிகப் பசித்த நிலையினைக் கண்டு, "சிவனடியாரை விரைவாகப் பசி தீர்த்து அமுதளிப்பேன்" என்று சென்று முன்னர்ப் பாதம் விளக்கும் பொருட்டு நீர்அளித்துப் பரிகலம் திருத்தியிட்டுக் குற்றந்தீர்க்கும் நல்ல விருந்தாகக் கொண்டு இனிய அடிசிலை ஊட்டுவாராகி.

18

1735. (இ-ள்.) வெறிமலர்மேல் திருவினையார்- மணமுடைய மலர்மேல் உள்ள திருவினைப் போன்ற அம்மையார்; கறியமுது...கைகூட - அப்போது கறியமுது உதவாமல் திருவமுது மட்டும் கைகூடிய நிலையில் இருக்க; விடையவன் தன்....அறிவினராய் - இடபத்தையுடையவரின் அடியவரே தேடிப்பெறுதற்கரிய விருந்தாக இங்கு வந்து கிடைப்பாரானால் இதன் மேலும் பெறத்தக்க பேறு வேறில்லை என்னும் துணிவுடையவராய்; அவர்...ஆதரிப்பார் - அவர்அமுது செய்வதனுக்குரிய செயலை அன்புடன் செய்வாராய்,

19

1736. (இ-ள்.) வெளிப்படை. தம் இல்லாளன் "இவற்றை வைக்க" என்று அனுப்பத், தம்மிடத்தில் முன்னர்இருந்த நல்ல நறுவிய மாங்கனிகள்