கண்டு - நண்ணி - அளித்து - வைத்து - ஊட்டுவார்(1736) - திருவனையார்- அறிவினராய் - ஆதரிப்பார்(1735) - கொண்டு - அணைந்து - படைத்து - அமுது செய்வித்தார் (1736) என இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க. 20 1737. | மூப்புறுமத் தளர்வாலு முதிர்ந்துமுடு கியவேட்கைத் தீப்பசியி னிலையாலு மயர்ந்தணைந்த திருத்தொண்டர் வாய்ப்புறுமென் சுவையடிசின் மாங்கனியோ டினிதருந்திப் பூப்பயின்மென் குழன்மடவார்செயலுவந்து போயினார். |
21 (இ-ள்.) முப்புறும்...திருத்தொண்டர் - மூப்பினால் வருகின்ற அந்தத் தளர்ச்சியினாலும் முதிர்ந்து பெருக்கெடுத்த உணவு பெறும் விருப்பத்தை எழுவிக்கும் வயிற்றுத் தீயின் செயலால் விளைந்த பசியின் நிலையினாலும் அயர்ச்சி கொண்டு அங்கு வந்து அணைந்த திருத்தொண்டர்; வாய்ப்பு உறும்....இனிது அருந்தி - வாய்ப்புப் பொருந்தியதாய், மெல்லியதாய்ச், சுவையினையுடையதாய்ப் பெற்ற அவ்வடிசிலினை அத்தன்மைத்தாகிய கனியினோடும் இனிது உண்டு; பூப்பயில்.....போயினார்- மலர்கள் பொருந்திய மெல்லிய குழலினையுடைய அம்மையாரது அன்பின் மிக்க செயலினை உவந்துகொண்டு போயினார். (வி-ரை.) அயர்ந்து அணைந்த அயர்ச்சிக்குக் காரணம் மூப்பின் தளர்வும், பசியின், முடுக்குமாம் என்பது. திருத்தொண்டர் என்ற சிறப்பினால் வந்ததொண்டர்இவ்வயர்ச்சியினைக் குறிவைத்து அணைந்தாரல்லர்என்றும், பின்னும் அம்யைாரது அன்பின் சிறப்பினை விளக்க அணைந்தனர்என்றும் குறித்தபடி. தமது அயர்ச்சியினை அவர் கூறினாரில்லை; அம்மையார் குறிப்பினால் நிலைகண்டுணாந்து பசி தீர்க்க ஆதரித்தார் என்றதும் இதனை வலியுறுத்தும். திருத்தொண்டர் முன் பரமனார் திருத்தொண்டர் - பிரான் மெய்த்தொண்டர் - விடையவன்றனடியார் - அல்லறீர்ப்பவர் அடியார் என்ற பெருமானொடு சார்த்திக் கூறிய ஆசிரியர் இங்குத் தனிமையிற் கூறியது என்னை? எனின், உவந்து போயினார் என்றும், "போயின பின்" என்றும் வரும் செயலுடன் பொருந்தும் பொருட்டென்க. வாய்ப்பு உறும் - அன்பின் பெருவாய்ப்புப் பொருந்திய முன் பல காலமும் "நம்பர்அடியா ரணைந்தா னல்ல திருவமுதளித்த" தெல்லாம் அன்பின் செயலேயாமாயினும் இங்கு அந்த அன்பு, முற்றிய நிலையடையும் தன்மை பொருந்தியது என்க. மென் சுவை வாய்ப்பு உறும் என்று கூட்டியுரைப்பாருமுண்டு. பூப்பயில் மென்குழல் மடவார் - "பூங்குழலர்" (1730); "மணமலியு மலர்க் கூந்தல் மாதரார்" (1783); "நறுங் கூந்தல்" (1739); "மொய்தருபூங்குழன்மடவார்; (1744); என்று பன்முறையும் இத்தன்மை பற்றிக் கூறியது இறைவரது திருவடிமலர் முடிக்கணிந்து இறவாத நாயகன்பால் என்றுமிருக்கின்ற தன்மை பற்றி என்க. செயல் - பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் சேவடியே சேர்ந்து, அண்டர்பிரான் றிருவார்த்தையே பயின்று, தொண்டர்வரிற் றொழுது வந்தது முதல், அன்று, அடியார்நிலை கண்டு ஏற்றவாறு முன் அமுதூட்டியது வரை உள்ள செயல்களின் தொகுதி. உவந்து போயினார் - உவப்புக்குரியபடி விரைந்து பயன் தருதல் குறிப்பு. 21 1738. | மற்றவர்தாம் போயினபின், மனைப்பதியா கியவணிகன் உற்றபெரும் பகலின்கண் ணோங்கியபே ரில்லெய்திப், பொற்புறமுன் னீராடிப் புகுந்தடிசில் புரிந்தயிலக் கற்புடைய மனையாருங் கடப்பாட்டி லூட்டுவார், |
22 |