பதிகப்பாட்டுக் குறிப்பு - (1) கூற்று ஆயின ஆறு - கூற்று - இயமன். உடலுயிர் களைக் கூறு செய்து பிரித்தலிற் போந்த காரணப் பெயர். இயமனை ஒத்து வந்தசூலை. கயிலை மலையை அசை்ததமையால் சிவாபராதம் செய்து "இடார்க்கீழ் எலிபோல் வலியெல்லாம் கெட்டு"க் (கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 83) கிடந்து பலகாலம் அழுது அதனால் இராவணன் என்ற பேரும் பெற்ற அரக்கனுக்குச் "சங்கரன் சாம கானப் பிரியன்" என்று தப்பும் உபாயம் அறிவித்தனர் முன்னைப் பிறவியில் முனிவராயிருந்த நாயனார் என்பதொரு வரலாறும், கோதா விரிக் கரையில் சமய உண்மை வினவிய முனிவர்களிடம் சமணமே உயர்ந்த தென்று வாதித்துச் சொற்போர் புரிந்தனர் என்பது ஒரு வரலாறும் கேட்கப் பட்டு, இக்குற்றங்களால் அவர் சமணம் புக்குச் சூலையினால் வருந்த நேர்ந்ததென்பர். கூற்று - ஆயின - ஆறு - சொல்லால் விளைந்த - வழிவந்த - தாகிய இந்நோயினை விலக்கிடீர் என்ற குறிப்புக்கள்பட அவர் இங்குப் பொருள் கொள்வார். "பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே" (தேவாரம்): கொடுமை......"அறியேன் - இக்கொடிய சூலைக்குக் காரணமாகிய கொடுமை - முன்னை வினை. ஏற்றாய் - அடிக்கே - என்னை ஏற்றுக்கொண்ட உமது அடியிணைக்கே. ஏற்றாய் இடபவாகனரே! என்றலுமாம். கெடிலக்கரை அதிகை வீரட்டானத்து உறை (வீரட்டானத் - துறை: அருட்டுறை என்பது போல என்றலுமாம்) அம்மானே! ஆற்றேன் என்க. விலக்ககிலீர் - நீக்கியருளுகின்றீரில்லை - கில் - ஆற்றலுணர்த்தும். இடைச்சொல். "கிற்றியே னெஞ்சே" (ஐயடிகள் க்ஷேத்திர வெண்பா 14)- (2) நெஞ்சம்....அறியேன்று1 - நாயனார் சமண சமத்திற்புக்குப் பலகாலம் உழன் றவராயினும், அந்நாளிற் சிவனை யிகழ்ந்துரைத் திருந்தனராயினும் சைவத்திறத்தடைந்த பின்னர்த், திருவருளின் பேற்றினால், எல்லா நெறிகளும் சிவநெறியினுள் ஒவ்வோர் அங்கமாக அடங்கும் நிலையினைக் கண்டார்; ."யாதொர்தேவ ரெனப்படு வார்க்கெலாம், மாதே வன்னலாற் றேவர்மற் றில்லையே" (அப்பர் தேவாரம்). "யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவார்" (சித்தியார்) என்ற உண்மை கண்டார்; எவ்வெத் தெய்வத்தினிடத்தும் செய்யும் எவ்வெவ் வழிபாடும் சிவனையே சார அதனத னளவுக்கேற்ற பயனைச் சிவனே அளிப்பன் என்றும் கண்டார்; ஆதலின் இவ்வாறு கூறியதென்க. "சலம்பூ வொடுதூப மறந் தறியேன்" என்ற 6-ம் திருப்பாட்டின் கருத்துமிது. இவ்வாறின்றிக் "கொடுமை பல செய்தன நானறியேன்" என்ற கருத்தைத்தொடர்ந்து கொண்டு இவை நாயனாரது முன்னைநிலையின் சிவநெறித் தவத்தினைக் குறித்தன என்று கொள்ளுதலுமாம். தம் முள்ளே சிவனருள் வெளிப்படப்பெற்றுத் தம் கரணங்கள் சிவ கரணங்களாகப் பெற்றமையால் முன்னை நிலையின் விளைவையுணர்ந்து கூறவல்லவராயினர் என்பது துணிபு. "நிறை தவத்தை யடியேற்கு நிறைவித்து" முதலிய திருவாக்குக்களும் பிறவும் இதனை வலியு.றுத்தும். இதுபோலவே ஆளுடைய பிள்ளையாரும்"மறக்கு மாறிலாத வென்னை மையல் செய்திம் மண்ணின்மேற், பிறக்குமாறு காட்டினாய்!" (திருத்துருத்தி) என்று கூறுவதும் பிறவும் இங்குச் சிந்திக்கத்தக்கன. 1. | "நினையாதொரு போதுமிருந்தறியேன்" "மறந்தறியேன்" என்ற திருவாக்குக்களால் சைவமும் சமணமும் ஒருதன்மைப்படுவன என்றும், சமயங்களெவையும் பெயர் மாத்திரையானன்றிக் கொள்கையால் மாறுபடுவனவல்ல என்றும் முடிவுகூறும் புதிய ஆராய்ச்சியாளருமுளர். எல்லாச் சமயங்களையும் படிமுறை காட்டி அதனத னளவில்வைத்து அமைதி கொள்வது சைவத்தின் உண்மைச் சமய சமரசமாகும். அவ்வாறன்றி ஒவ்வோர் சமய உண்மை காணப்படுவது. |
|