லார்...ஒன்று - தாழும் கூந்தலினையுடைய அம்மையாரது திருக்கையினிடத்து அதிமதுரக் கனி ஒன்று வந்து பொருந்தியிருந்தது. (வி-ரை.) அம்மருங்கு - அகன்று சென்ற அவ்விடத்தில். அருங்கனிக்கு அங்கு என் செய்வார் - கனியிலது என்று சொல்லவும் மாட்டாது, கொண்டுவரவும் மாட்டது கவலை கூர்வார்; இல்லை என்று கூறிக் கணவனைத் தெருட்டுவதன்றிக், கனி கொண்டு வந்து கொடுத்தலே மேல் என்று சிந்திக்கவே, அவ்வாறு கனிகொண்டு வர என்ன வழி காண்பார்என்றதாம். மெய்ம்மறந்து நினைந்து - "தம்மை மறந்து நின்னை நினைப்பவர், செம்மை மனத்தினும்" (கோயினான் - 4) என்றபடி தம்மை முற்றிலும் மறந்து சிவபெருமான் ஒருவரையே நினைந்து. உற்றவிடத்து - துன்பம் உற்ற அப்போது அவ்விடத்தில். தான் - பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து சேர்ந்த அந்தச்சேவடிகள். மனங்கொண்டு உணர்தலாவது - மன முழுதும் அதுவேயாகி நிற்கும்படி அழுந்தியறிதல். தாழ்குழலார்- தாழ் - விரும்புதல். தொங்குதல் என்றலுமாம். வந்து இறந்தது - வந்து பொருந்தி நின்றது. வருதலும் இருத்தலும் வெவ்வேறு செயல்கள். பின்னர்வணிகன் கைப்புக்க மாங்கனி வாங்குமளவில் வந்து பின் இருக்காது மறைவதுபோலன்றி, வந்து இருந்தது என்க. அதிமதுரக்கனி - வணிகன்தான் உண்ட மதுரம் வாய்ந்த கனியினும் அதிமதுரம். அதிமதுரம் - என்பது ஒரு மருந்துப் பண்டம்; அது, மதுரம் மிகினும் தாகத்தைத் தவிர்க்கும்; அங்கு வந்தது மாங் கனியன்றி அதிமதுரக்கனி என்ற தொனிப் பொருளால் அதனை யுண்டபின் வணிகனுடைய இவ் வில்வாழ்க்கைத் தாகம் தவிர்க்கப்படும் என்பது குறிப்பு. முன் வணிகன் உண்ட மதுரக்கனி இனிய சுவை ஆராமை மேலும் உண்ண ஆவல் தந்தது; இங்கு வந்த அதிமதுரக் கனியை அவன் உண்ணவும் புலனின்பத்தின் வேறாகிய தெய்வ நலத்தின் உணர்வும், அம்மையாரை வழிபடும் முதற்பேறும் விளைவனவாதும் காண்க. ஒன்று ஒப்பற்றது என்பதுமாம். 1742. | மற்றதனைக் கொடுவந்து மகிழ்ந்திடலு மயின்றதனில் உற்றசுவை யமுதினுமேற் படவுளதா யிட, "விதுதான் முற்றகுமாங் கனியன்று; மூவுலகிற் பெறற்கரிதாற், பெற்றதுவே றெங்" கென்று பெய்வளையார்தமைக்கேட்டான். |
26 (இ-ள்.) மற்றதனை.....இடலும் - அவ்வாறு வந்திருந்த அக்கனியைக் கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் இடுதலும்; அயின்று - அதனை உண்டு; அதனில்...அயிட - அதனிற் பொருந்திய சுவையானது அமுதத்தினும் மேலாக உள்ளதாகவே; இதுதான்....கேட்டான் - இது முன்பு தந்த மாங்கனியன்று; மூவுலகிலும் பெறுதற்கரிதாகும்; இதனைப் பெற்றதுதான் வேறு எங்கு?" என்று (வணிகன்) அம்மையாரைக் கேட்டனன். (வி-ரை.) மற்று அதனை - கணவன்தான் வைப்பித்த கனி இன்னும் உளது என்று எண்ணிக்கேட்ட அதனின் வேறாதலின் மற்று என்றும், அருளால் வந்திருந்த அது என்பார்அதனை என்றும் கூறினார். மகிழ்ந்து - "அயர்வாந்" தன்மை நீங்கி, மகிழ்வாந்தன்மை பெற்று. இகம்பரம் என்ற இருநிலையும் பிறழாது செல்லும்படி கனி உதவிற்று என்ற மகிழ்ச்சி. |