பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்859

 

மாங்கனி ஒன்று - முன்னர்வந்தது நுகர்தற்பொருட்டு அளிக்கப்பட்டதாதலின் சுவைத்திறம்பற்றி "அதிமதுரக் கனியொன்று கைம்மருங்கு வந்திருந்தது" (1741) என்றார். இங்கும் அருளால் வந்ததாயினும் இது நுகர்தற்பொருட்டானன்றி அருளுக்குச் சான்றுநிற்கும் அளவே வந்ததாதலின் "மாங்கனி ஒன்று" என்று மாங்கனியின் உருவமே பற்றிக் கூறினார்.

மற்று அதனை - மற்று - அருளால் வந்த இரண்டினும் முன்னையதின் வேறாகிச் சான்றாகிய அளவில் வந்தது என்ற குறிப்புத் தந்து நின்றது.

ஆங்கு அவன் - ஆங்கு - கனிபெற்ற இடத்தினின்றும் வேறாகிய உணவுண்ட இடம். ஆங்கு - அக்கணமே என்றலுமாம். அவன் கேட்ட ஆங்கு - கேட்டபடி - என்றலுமாம். அவன் - திருவருளுக்குச் சேயனாய் ஐயப்பட்ட அவன் என்றதும் குறிப்பு. முன்னறிசுட்டு.

அதிசயித்து வாங்கினான் - ஒருமுறைக் கிருமுறையும் கைகண்ட பொருளாய்க் கண்டானாதலின் அதிசயித்து என்றார். "அதிசயம் கண்டாமே" என்றது திருவாசகம்.

கைக் கொடுத்தலுமே - உண்ணுதலை விரும்பிக் கேட்டானாதலின் அருளால் முன் வந்த கனியைக் கலத்தினிட்டார்என்று "மகிழ்ந்திடலும்" (1742) என்றார்; இங்கு அருளின் உண்மையைக் காணச் சான்று வேண்டிக் கேட்டானாதலின் அதனைக் கலத்திலிடாது கையிற் கொடுத்தனர்என்பது.

இல்லாளன் தொடர்பாகிய உலக யாப்பு(கட்டு) இதனோடு அற்றுவிடுவதாதலின் இதுவரை கூறிவந்த யாப்பினை மாற்றி வேறு யாப்பிற்கூற எடுத்துக் கொண்டார். இனி வேறாகிய சிவத்தொடர்பு என்பதாம்.

30

வேறு

1747.

வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
றணிவரும் பயமேற் கொள்ள வுள்ளமுந் தடுமா றெய்தி
யணிகுழ லவரை வேறொ ரணங்கெனக் கருதி, நீங்குந்
துணிவுகொண்டெவர்க்குஞ்சொல்லான் றொடர்வின்றி யொழுகு நாளில்;

31

1748.

 விடுவதே யெண்ண மாக மேவிய முயற்சி செய்வான்
"படுதிரைப் பரவை மீது படர்கலங் கொண்டு போகி
 நெடுநிதி கொணர்வே"னென்ன, நிரந்தபல் கிளைஞ ராகும்
 வடுவில்சீர்வணிக மாக்கள் மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.

32

1747. (இ-ள்.) வணிகனும்...காணான் - வாங்கி வணிகனும் தனது கையில் புகுந்த மாங்கனியினைப் பின்பு காணாதவ னாயினான்; தணிவரும்.....எய்தி - தணியாத பயம் மேற்கொள்ளவே மனம் தடுமாறி; அணி குழலவரை...கருதி - அழகிய கூந்தலுடைய அம்மையாரை மானுடரல்லாத வேறு ஒரு தெய்வம் என்று எண்ணி; நீங்கும் துணிவு கொண்டு - அவரை விட்டு நீங்கிவிட வேண்டுமென்ற துணிவு கொண்டு; எவர்க்கும்....நாளில் - இதனை எவரிடமும் சொல்லாதவனாய் அம்மையாரிடம் தொடர்பு இல்லாமல் ஒழுகுகின்ற நாளில்.

31

1748. (இ-ள்.) விடுவதே...செய்வான் - அம்மையாரை விட்டு நீங்குவதனையே எண்ணி அதற்குப் பொருந்தும் முயற்சியைச் செய்வானாய்; படுதிரை...என்ன - "அலைகளையுடைய கடலின்மேல் செல்லும் கப்பலைக் கொண்டு சென்று பெருஞ் செல்வம் கொண்டு வருவேன்" என்று சொல்லவே; நிரந்த...சமைப்பித்