பக்கம் எண் :


86திருத்தொண்டர் புராணம்

 

(2) நஞ்சாகி - வடவனலுங் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் (1315) என்றது காண்க. "குடரோடு தொடக்கி முடக்கியிட", "சுடுகின்றது", "பறித்துப்புரட்டியறுத் தீர்த்திட", "கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன", வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தால்", "வேதனையான" என்பன சூலை நோயின் கொடுமை குறித்தன. தூரத்துமிடீர்; அஃதில்லையேல் கரந்துமிடீர் என்க. துரந்து - நீக்கி; கரந்து - மறைத்து. அஞ்செலுமெனீர்! அவை யிரண்டிலொன்று செய்யீராயிளும், அஞ்சற்க! என்றாகிலும் சொல்லீர் - (3) பணிந்தாரான - பணிந்தவர்களுடைய. பாற்றுதல் - போக்குதல். துணிந்தே - சரிதக் குறிப்பு. பிணிந்தார் - இறந்தவர் - (4) முன்னம் - முன்னைப் பிறவியிலும், இப்பிறவியில் இதற்கு முன்னும். அறியாமையினால் முனிந்து - நல்லாறு - தெரியாது செய்த பிழையினால் என்னை முனிந்து சூலையை அளித்தீர் என்பது. தன்னை....கடனாவதுதான் என்ற உண்மையினைக் எடுத்துக்காட்டி, நீர் தலைவர்; நான் ஆளாக அடைந்தவன்; ஆதலின் என்னைக் காத்தல் உமக்குக் கடன் என்று வேண்டுதல் செய்தபடி. தான் - உறுதிப்பாடு குறித்தது - (5) கரைநின்றவர் (களாகிய) காத்து ஆள்பவர் என்று கூட்டுக. காவலிகழ்தல் - காவலை மீறிநடத்தல். கண்டுகொள்....நூக்கியிட - குளக்கரையில் காவலாக நின்றாறொருவர், அறியாது இறங்கும் ஒருவரை நோக்கி "இது ஆழமுடைத்து - வழியும் துறையும் இனியவையல்ல" என்று எச்சரித்து அறிவிக்கவும், அதைக் கேளாமல் அவர் இறங்கப் புக்காரகில் ‘நீயே அனுபவித்து அறிக பற்றிச் சமயங்கள் யாவும் ஒன்றே என்றாவது எல்லாவுண்மையும் காணும் சைவத்தின் முழுமையோடு அவை ஒப்பான என்றாவது கொள்ளுதல் தவறாகிய சமரசமாம். இறைவனைக் காணாத சமயம், உயிர்களைக் காணாதசமயம், உயிர்களைக் கட்டிய பந்தர்களைக் காணாத சமயம் உலகத்தைக் காணாத சமயம், இறைவன் உண்டெனினும் அவனை உயிர்களுள் ஒருவனாகக் காணும் சமயம், பிறந்திருக்கும் பசுக்களைக் கடவுளராகக் கொள்ளும் சமயம் என்றெல்லாம் உயிர்களின் பக்குவபேதம் நோக்கிப் பற்பலசமயங்களும் தம்முள் மாறுபடுவனவும் வேறுபடுவனவுமாம் என்ற உண்மை, உண்மைகண்ட ஞானநூல்களுள் பரபக்க சுபக்கங்களுள் விளங்க நிலை நாட்டப்பட்டது. "கொல்லாமை மறைந்துறையும்" எனப்படும் பழஞ்சமணமோ, அன்றித் துறவுமேற்படுவ தெனப்படும் இடைக்காலச் சமணமோ எதுவாயினும் சைவத்தின் முழுமைக்கண் வாராமை ஞான நூல்களுட் காண்க. சமணமோ அன்றி வேறெந்தச் சமயமோ சைவத்துளடங்கலாம்; ஆனால், சைவம் வேறெதனுள்ளும் அடங்காது; முழுப் பொற்காசும் செப்புக்காசும்போல என்பது. இது பற்றித் தாயுமானார் முதலிய பல பெரியோர் செய்துள்ள விளக்கங்களும் கருதுக. "சோபான பட்சங்காட்டி", "இராசாங்கத் தமர்ந்தது வைதிக சைவமழகி தந்தோ?", "நீதியினாலிவை யெல்லா மோரிடத்தே காணநிற்பது" முதலியவை ஆன்றோர் மொழிகள். "ஏழையே னான்பண்டிகழ்ந்த வாறே" என்று சமணத்தின் பிணக்கநிலை காட்டும் திருவாக்கும், நினையா தொருபோது மிருந்தறியேன்" "மறந்தறியேன்" என்று சைவத்தின் இணக்கநிலை காட்டும் திருவாக்கும் இதனை விளக்குவன. "முன்னம் மடியே னறியா மையினால்" (4) என்றதும், "சமயங்க் ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பரரு ளாமையினால்" (1302) என்றதும் இவ்வுண்மையினையே விரிப்பன. "எந்நிலையி னின்றாலும் எக்கோலங் கொண்டாலும், மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள் என்றே" என்று சாக்கிய வேடத்தைத் துறவாதே சிவநெறி நின்ற சாக்கிய நாயனாரது வரலாற்றின் நுட்பமும், தண்டியடிகள் வரலாறும் இங்கு வைத்துச் சிந்திக்கத்தக்கன.