பக்கம் எண் :


872திருத்தொண்டர் புராணம்

 

ஒழுகியதனை உணர்த்தினான். இதனை இன்னபடி என்று முன் வரலாறு அறியாமையால் மயங்கி நின்றனர் அம்மையாரும் சுற்றத்தார்களும் ஆயினும் அம்மையார் தமது நிலைக்கேற்ப வினவாது அஞ்சி ஒதுங்கி நிற்கச், சுற்றத்தார் வினவுகின்ற நிலை மேல்வரும் பாட்டினாலும், வணிகனது மாற்றங் கேட்ட பின் அவ்விரு திறத்தாரும் அடைந்த நிலை 1764-ஆம் பாட்டினாலும் ஒருங்கு கூறுவது காண்க.

குழவி - உமது நாமம் - குழவிக்கு உமது நாமம் இட்டிருக்கின்றேன் என்று வருவித்துக் கொள்க. விரைவின் அறிவிக்க வேண்டிப் பேச்சு வழக்கு முறையில் கூறிய அமைதி காண்க.

முன் பணிந்து - திருமுன்னர் என்றும், அவர் வணங்கத் தொடங்கு முன்பு என்றும் இடத்தாலும் காலத்தாலும் முன் என்க.

வீழ்ந்தான் என்ற சொல்லாற்றலால் வேறு செயலறியாது அச்சம் மிகுதியினால் அடியற்ற மரம்போல விழுந்தான் என்று உணர்த்தியபடி.

45

1762.

கணவர்தாங் வணங்கக் கண்ட காமர்பூங் கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத் தார்பா லச்சமோ டொதுங்கி நிற்ப,
வுணர்வுறு கிளைஞர் வெள்கி "யுன்றிரு மனைவி தன்னை
மணமலி றாரி னாய்நீ வணங்குவ தென்கொல்!" என்றார்.

46

(இ-ள்.) கணவர்...நிற்ப - தம் கணவர் தம்மை வணங்கியது கண்ட அழகிய பூங்கொடி போன்ற புனிதவதி யம்மையாரும் பக்கத்தே பொருந்தி நின்ற சுற்றத்தார்களிடம் அச்சத்துடனே ஒதுங்கி நிற்க; உணர்வுறும்...என்றார் - உணர்வு பொருந்தும் சுற்றத்தார்கள் வெட்கமுற்று, "மணமிகுந்த மாலை யணிந்த நீ உன் திருமனைவியை வணங்குவதென்னை?" என்று கேட்டனர்.

(வி-ரை.) கணவர்தாம் - புனிதவதியம்மையார் தமது திருமனத்தினுள் வணிகனைக் கணவன் என்ற முறையில் அமைத்து "மன்னிய கற்பினோடு மனையறம் புரிந்து வைகியதனால்" (1755) அவரது மனநிலைக் கேற்பப் பன்மையாற் கூறினார். ஆதலின் முன் எல்லாம் வணிகனை ஒருமையாற் கூறியதுடன் முரணாமை யறிக. இம் மனநிலை மாறியபோது அம்மையாரும் "இவன்" (1765) என ஒருமையாற் கூறுவதும் சிந்திக்க.

காமர் பூங்கொடி அன்னார் - காமர் - அழகிய பூங்கொடி - பூக்கொடி என்பது மென்மைபற்றி மெலிந்து வந்தது. முகமுங் கண்ணும் கையும் முதலிய பலவும் பல வேறு அழகிய பூக்களை ஒத்து விளங்குதலால் பல வேறு பூக்கள் மலரவுள்ளதொரு கொடி உண்டேல் அதுபோன்றார் என்க. இல்பொருளுவமை. "திருவளர் தாமரை" என்ற திருக்கோவையார்த் திருப்பாட்டு ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.

கொடி அன்னார் - சுற்றத்தார்பால் - ஒதுங்கி நிற்ப - தனித்து நில்லாது ஒரு கொழு கொம்பினைப்பற்றி நிற்கும் தன்மையுடையது கொடி. இதுவரை கணவன் என்றபற்றுக்கோடு கொண்டிருந்த அம்மையார் ஈண்டு அப்பற்றைப்பற்றுதல் இயலாமை காண நிகழ்ந்தபோது அணைவுறும் சுற்றத்தார் தாம் அடுத்த பற்றுக் கோடாக நின்றாராதலின், வணங்கி அவனை விட்டு இவர்கள்பால் ஒதுங்கி நின்றனர். இந்த நிலை குறிக்க ஈண்டுக் கொடியினை உவமித்தார். முன்னர் மயில் அன்னார் என்றது மணக்கோலம் பற்றியும், தனித்திரு என்றது கணவர்க்கும் உலகுக்கும் முத்திநெறி தரச் செல்லும் நிலை பற்றியும், மானிளம்பிணை என்றது