பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்877

 

துரைத்தருளினர்; அவ்வடிவுடன் திருவாலங்காட்டில் இறைவரது மேல் நோக்கி எடுத்த திருவடியின் கீழே அமர்ந்து என்றும் ஆனந்தம் சேர்ந்து கீதம் பாடிக்கொண்டு அம்மையார் அமர்ந்துள்ளார்; அவ்வடிவில் அமைந்து அம்மையார் திருப்பதிகங்களையும் இரட்டைமணிமாலை திருஅந்தாதி என்ற திருவாக்குக்களையும் அருளிச் செய்தனர்; எனவே இயலும் இசையும் பாடுதற்குரிய வாக்கு முதலிய புறக் கரணங்களையும் மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம் அவ்வடிவம் என்பது பெறப்படும். அது தத்துவ காரிய மாயா உடலொழிந்த ஞானவடிவமென்று இங்கு விசேடவுரை காண்பாருமுண்டு. அது பொருந்தாமையறிக. ஆளுடைய நம்பிகளும் கழறிற்றறிவார் நாயனாரும் திருக்கயிலைக்குச் சென்றபோது அவர்களுடைய திருமேனிகள் அடைந்த ஒளியுருவமாகிய "மானவயாக்கை"யின் தன்மை இங்கு வைத்துக் காணத்தக்கது. அவர்களும் பாடிக்கொண்டு சென்றதும், கணநாதர்களாகித் தம் தொழிற்றலை நின்றதும் அவர்களது திருமேனியின் ஒளி, ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளியாகிய முனிவர்களாற் காணப்பெற்றதும் கருதுக. "பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்" (திரு அந்தாதி - 86) "காரைக்காற் போய்" (பதிகங்கள்) என்று தமது திருவாக்கினால் அறிவிக்கின்றதும், அதுபற்றியே திருத்தொண்டத் தொகையினுள் "பேயார்" என்றே போற்றப்பட்டதும் இக்கருத்துப்பற்றியன. (நற்கணம் - சிவபூதகணம்). அம்மையார் கண்டதும் கொண்டதுமாகிய இப்பேய் வடிவம்பற்றிக் I "கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப், பங்கி சிவந்திரு பற்கணீண்டு பாடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்"; செடிதலைக் காரைக்காற்பேய் (11); II (6); காடு. மலிந்த கனல்வா யெயிற்றுக் காரைக்காற் பேய்" (11) என்றிவ்வாறு பலவும் திருப்பதிகங்களுள் அம்மையார் தாமே அருளிச் செய்பவற்றையும் கருதுக. இப்பெருமைகள் பற்றியே இதனை "வானமு நிலனுமெல்லாம் வணங்குபேய் வடிவம்" (1766) என்று விதந்து கூறுவது காண்க. இங்கு, இம்மாயையுடல் மயக்கஞ்செய்யாது பகல் விளக்குப்போல அருண்மயமானது. "அங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்" (1260).

பாங்குற அடியேனுக்கு வேண்டும் என்க. பாங்கு - அடிமைத்திறத்தினின்றும் மாறாது இடையறாது நிற்கும் நிலை.

பரமர் - பரமதத்தன் என்ற இதுவரையும் கொண்ட உடல்நாயகன் விட்டபோது பரமனாகிய நீங்காத உயிரின் நாயகர் என்ற குறிப்புப்பட பரமர் என்ற சொல்லாற் கூறினார்.

பரமனை - என்றதும் பாடம்.

49

1766.

1ஆனவப் பொழுது, மன்று ளாடுவா ரருளி னாலே
மேனெறி யுணர்வு கூர, வேண்டிற்றே பெறுவார் மெய்யி
லூனடை வனப்பை யெல்லா முதறியெற் புடம்பே யாக
வானமு நிலனு மெல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.

50

(இ-ள்.) ஆன...கூர - இவ்வாறு பரவி நின்றாராயின அப்பொழுது, அம்பலத்தில் அருநட்டம் ஆடுகின்ற இறைவரது திருவருளினாலே, மேலாகிய நெறிதரும் உணர்வு மிகுதலாலே; வேண்டிற்றே பெறுவார் - தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி; மெய்யில்...ஆக - உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, எலும்புக்கூடாகிய