உடம்பே தமது திருமேனியாகியிட; வானமும்...ஆனார் - மேலுலகமும் மண்ணுலகமும் எல்லாம் வணங்கத்தக்க பேயாகிய சிவகணநாதரது வடிவம் உள்ளவராயினர். (வி-ரை.) மேல் நெறி உணர்வு கூர - "சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்கவுணர்வுகொண்டு" (1764) என்ற கருத்து. கூர - கூர்தலாலே. கூர்தல் - உள்ளது சிறத்தல்; மேனெறி உணர்வினாலே இவ்வரம் வேண்டினர் என்பது. வேண்டிற்றே பெறுலார் - மேனெறி உணர்வின் மிகுதியால் வேண்டியதனை வேண்டியவாறே வேண்டிய அப்பொழுதே பெறுவாராகி. பெறுவார் - உதறி - ஆக - ஆனார் என்று முடிக்க. ஊன் - அடை வனப்பை எல்லாம் உதறி - ஊன் பொதியும், அதனைப் பற்றாக இடம் பெற்றிருந்த வனப்பின் பகுதிகளும் ஆகிய இவற்றையெல்லாம். "வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து இங்கு" (1765) என்று வேண்டும் அதுவே வரமாக. உதறுதல் - சிந்திவிடச் செய்தல். எற்பு உடம்பே ஆக - எலும்புக்கூடாகிய உடம்பே வடிவம் ஆக. வானமும் நிலனும் எல்லாம் வணங்குதல் - மேல் நடுக் கீழ் என்ற மூவுலகத்துயிர்களும் போற்றும். கீழ் உலகத்தை, எல்லாம் என்று மங்கலமரபாற் கூறினார். "மூவுலகிற் பெற்ற கரிதால்" (1742) என்று முன்னர் வணிகன் கூறிய குறிப்பும் காண்க. பேய் வடிவம் - அம்மையார் தாம் வேண்டிய சிவபூதகண வடிவம். ஊனுடை - மண்ணுமெல்லாம் - என்பனவும் பாடங்கள். 50 1767. | மலர்மழை பொழிந்த தெங்குங்; வானதுந் துபியி னாதம் உலகெலா நிறைந்து விம்ம வும்பரு முனிவர் தாமுங் குலவினர்; கணங்க ளெல்லாங் குணலையிட்டன;முன் னின்ற தொலைவில்பல் சுற்றத் தாருந் தொழுதஞ்சி யகன்று போனார். |
51 (இ-ள்.) வெளிப்படை. எங்கும் தெய்வப் பூமழை பொழிந்தது; தெய்வதுந்துபி முழக்கம் உலகெலாம் நிறைந்து பெருகத் தேவர்களும் முனிவர்களும் குலாவி மகிழ் சிறந்தனர்; சிவகணங்கள் எல்லாம் குணலைக்கூத்தாடின; முன்னே நின்ற குறைபாடில்லாத பல சுற்றத்தார்களும் தொழுது பயந்து நீங்கிப் போயினர். (வி-ரை.) அம்மையார் பேய் வடிவங் கொண்டவுடன் நிகழ்ந்தவற்றை இப்பாட்டாற் கூறுகின்றார். வான துந்துபியின்...விம்ம - சிவனருள் வெளிப்பாடு பெறும் காலங்களில் தேவ துந்துபி முழக்கம், இயக்குபவரின்றியும் முழங்குவது ஓர் உண்மை, ஆளுடைய பிள்ளையார் திருவவதார நிகழ்ச்சிகளை இங்கு வைத்துக் காண்க. குலவினர் - கலந்து மகிழ்ந்தனர். குணலை - மகிழ்ச்சி மிக்கபோது ஆடும் பாட்டுடன் கூடிய ஒருவகைக் கூத்து. குணாலை என்பதும் வழக்கு. முன் நின்ற தொலைவில் பல் சுற்றத்தாரும் - முன் நின்ற - காலத்தானும் இடத்தானும் முன் நின்ற சுற்றமாகிய இவர்கள் முன் நிற்னாராயினும் முன் கண்டாராயினும், சிறப்பின்மை பற்றியும், பயன்பெறாது அகன்றமை பற்றியும் இறுதியில் வைத்துக் கூறப்பட்டனர். சுற்றத்தாரும் - இவர்கள் அம்மையாருடன் காரைக்காலினின்றும் பேரந்தவர்களும், வணிகனின் பின்மனைவியின் தொடர்பினால் அவனுடன் போந்தவர்களுமாம். இருதிறமும் இருவழியும் சார்தலின் பல் சுற்றத்தார் என்று |