பொதுப்படக் கூறினார். அம்மையாரின் நலம் பற்றிப் பயன்பெறா தகன்றா ராயினும் அவரது முன்னைநிலை உடற்சார்பு பற்றிய தொடர்ச்சியை விடாது கொள்ளுதல்பற்றித் தொலைவில் என்றார். வாணிகனது நிலைபற்றிக் கூறாததென்னை? எனின், அவன் அம்மையாரை நற்பெருந் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நிலையை முன்னரே கொண்டொழுகியமையால் மேலும் கூறவேண்டா என்க. அவன் அந்நிலையே பின்னும் ஒழுகி நலம்பெற்றான் என்பது கருதப்படும். அன்றியும் கணவன் என்ற நிலை நீங்கிய வழி அவனைச் சுற்றத்தாருள் ஒருவனாகவே வைத்து அடக்கிக் கூறினார் என்றலும் பொருந்தும். குலவிய - தொலை பல - என்பனவும் பாடங்கள். 51 1768. | உற்பவித் தெழுந்த ஞானத் தொருமையி னுமைகோன் றன்னை யற்புதத் திருவந் தாதி யம்பொழு தருளிச் செய்வார் "பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்று நற்கணத் தினிலோன் றானே னா"னென்று நயந்து பாடி, |
52 1769. | ஆய்ந்தசீ ரிரட்டை மாலை யந்தாதி யெடுத்துப் பாடி, யேய்ந்தபே ருணர்வு பொங்க வெயிலொரு மூன்று முன்னாட் காய்ந்தவ ரிருந்த வெள்ளிக் கயிலைமால் வரையை நண்ண வாய்ந்தபே ரருண்முன் கூர வழிபடும் வழியால் வந்தார். |
53 1768. (இ-ள்.) உற்பவித்து...ஒருமையின் - உள்ளே தோன்றி மேல் எழுந்த ஒருப்பட்ட ஞானத்தினாலே; உமைகோன்...அருளிச்செய்வார் - உமைபங்கராகிய சிவபெருமானைத் துதித்து அற்புதத் திருவந்தாதியினை அப்பொழுதே அருளிச் செய்வாராகி; "பொற்புடை...நான்" என்று நயந்துபாடி - அழகியசிவந்த பாததாமரைகளைப் போற்றுகின்ற நல்ல சிவபூத கணங்களுள் நானும் ஒன்றாயினேன்" என்று விரும்பிப் பாடி, 52 1769. (இ-ள்.) ஆய்ந்த...பாடி - (அதன்மேல்) ஆய்ந்த சீருடைய இரட்டை மணிமாலையினையும் அந்தாதித் தொடையாக எடுத்துப் பாடிப், (பின்னர்); ஏய்ந்த...பொங்க - பொருந்திய பேருணர்வு மேன்மேலும் பொங்கி யெழுதலால்; எயிலொரு மூன்றும்...கூர - மதில்களையுடைய மூன்று புரங்களையும் முன்னாளில் எரித்தவராகிய சிவபெருமான் எழுந்தருளியிருந்த பெரிய கயிலாய மலையினைச் சென்றடையும் பொருட்டு வாய்ந்த பேரருள் முன்னே கூடுதலால்; வழிபடும் வழியால் வந்தார் - வழிபடுகின்ற வழிக்கொண்டு வந்தனர். 53 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1768. (வி-ரை.) உற்பவித்து எழுந்த ஞானத்தின் என்க. ஒருமை ஞானம் - சிவனையன்றி வேறொன்றும் புலப்படாது முழுதும் சிவமயமாகி நிறைவுற்ற ஞானம். உற்பவித்து - தோன்றி; பவம் - தோற்றம்; உத் என்றது பகுதிப் பொருளை மிகுதிப்படுத்தும் உபசர்க்கம் என்பது வடவர் வழக்கு, ஒருமையாவது அறிவு, அறிபவன், அறியப்படுவோன் (ஞானம் - ஞாதுரு - நேயம்) என்று மூன்றாகப் புலப்படாது சிவனறிவு மாத்திரையேயாகித் தோன்றித் தானற்று நிற்குநிலை. முன்னர் "மெய்ம்மறந்து...தம் மனங்கொண் டுணர்தலுமே" (1741) என்றதும், "சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்க வுணர்வு கொண்டு" (1764) என்றதும் இத்தன்மையின் தொடக்கங்களேயாயினும், அங்குத், தாம் என்றும், தம் கணவன் என்றும் இவ்வாறு உள்ள பிற பொருள்களும் மனத்தில் இடம் பெற்றன; இங்குச் சிவனையன்றி அவ்வாறு வேறொன்று மிடம்பெறாமையின் ஞானத்து ஒருமை என்றார். இங்கு, "நற்கணத்தினில் ஒன்றானேன் நான்" என்ற விடத்து வரும்` |