பக்கம் எண் :


892திருத்தொண்டர் புராணம்

 

அம்மையே என்று அருள் செய்ய அப்பா! என்று பாதம் பணிந்து வீழ்ந்தெழுந்தார் - அம்மையார் கூறுவதன் முன் ஐயன் அருளியது கருணைப் பெருக்கினைக் காட்டும். அன்றியும் அருட்டிரு மொழி பெற்ற துணையானே, அப்பா என்ற அருள்மொழி பிறந்து, பின்னர்ப் பெறும் பேறுகள் நிகழ் வனவாயின என்பதும் கருதத்தக்கன. "திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணாமுன்னே, அங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) என்றதும், ஆண்டுரைத்தவையும், ஆண்டும் அங்கணர் என்றருளியதும் காண்க.

தம்மை - எதிர்நோக்கி - மீண்டும் நோக்கி, இப்பாட்டில் முன் அணையநோக்கி (1774) என்றது அருள் செய்தற்குச் செய்யும் சாதனமாகிய நோக்கம். ஈண்டு எதிர்நோக்கி என்றது அவர் கேட்கும் வரம் அருளித் திருவடிக்கீழ் நீங்காதுவைத்தற்குச் செய்யும் சிறப்பு நோக்கம். "வேண்டி நீயாதருள்செய்தா யானு மதுவே வேண்டி னல்லால்" என்ற திருவாசகம் ஈண்டு வைத்துக் கருதற்பாலது.

நம்பால் இங்கு வேண்டுவதென் என்றது, பாண்டி நாட்டினின்றும் வடதிசைத் தேயமெல்லாம் கடிது சென்று கயிலைவந்தடைந்தமையின் இங்கு எதனை வேண்டி வந்தது? என்றார்.

இயம்புகின்றார் - இயம்புகின்றாராகி. முற்றெச்சம். இயம்புகின்றார் - என்றார் என வரும்பாட்டுடன் முடிக்க.

இறைஞ்சி நின்றிது புகன்றார் - என்பதும் பாடம்.

59

1776. (வி-ரை.) இறவாத இன்ப அன்பு - இறவாத இன்பம் - இறவாத அன்பு என்று ஈரிடத்தும் கூட்டுக. இறவாத - அழிதலில்லாத - கெடாத - நித்தமாகிய. உறுதிப் பொருள்பற்றி எதிர்மறையாற் கூறினார். இன்பமும் அன்பும் பிரிக்க முடியாதபடி இணைந்த இருதன்மைகள். "இன்பமே என்னுடையன்பே" (திருவா); "அன்பினா லின்ப மார்வார்" (342); "இன்ப மான வன்பினை யெடுத்துக் காட்ட" (751) முதலியவை காண்க. அன்பு வேண்டி என்றது அன்புதானே எல்லாப் பேற்றுக்கும் அடிப்படையாதல் குறித்தது. பின் என்ற குறிப்புமது.

பிறவாமை வேண்டும் - பிறவியில் வந்த வாதனைபடும் மக்கள் வேண்டிக் கொள்ளத்தக்க வரமாவது பிறவாமை யொன்றேயாம் என்பது அறிந்த பெரியோர் எல்லாரும் ஒப்பக்காட்டிச் சென்றதோ ருண்மையாம். "செடிகொணோய் வடிவொன் றில்லா, வூத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தி" (தனி நேரிசை - 1); "அவிநாசியே, யெங்கோனே யுனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே" (நம்பி - புக்கொளியூர் - அவிநாசி - 3); "மீட்டேயும் பிறவாமல் காத்தாட் கொண்டான்", "மீட்டிங்கு வந்த வினைப்பிறவி சாராமே" "பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானுமுனைப் பரவுவனே" (திருவாசகம்); இன்னம் "பிறக்க விசைவையோ நெஞ்சமே" முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது, வேண்டாமை வேண்ட வரும்" (குறள்) என்ற திருக்குறள் இதனைத் தேற்றப்பட எடுத்துக் கூறியது காண்க. "கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல், அண்டம் பெறினும் மதுவேண்டேன்" என்றும், "யானே பிறப்பறுப்பா னெண்ணினேன்" என்றும் வரும் அற்புதத் திருவந்தாதித் திருவாக்குகளும், "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டி னஃதொன்றுமே வேண்டுவது" (களிறு - 40) முதலியவையும் காண்க.

மீண்டும் பிறப்புண்டேல் - பிறவாமை அம்மையார் வேண்டிக்கொள்ள இறைவரும் வேண்டுவார் வேண்டியதே ஈவோராதலின்அவ்வாறே தந்தருளுவாராகவும், அது காலத்தானன்றிக் கைவரப் பெறாதாதலின், பெறும் காலம் வரை முன்