பக்கம் எண் :


896திருத்தொண்டர் புராணம்

 

திருவாலங்காடாம்......அடைந்தார் அன்றே - திருக்கயிலையில் வேண்டிய வரத்தினை இத்தலத்திற் பெறும்படி அருளப் பெற்றாராதலின், இதுவும் கயிலையோடொப்பதாம் என்றுட்கொண்டு, கயிலையை அடைந்த அவ்வாறே இங்கும் அடைந்தனர் என்க. அங்கு ஐயனது அருணடத்தின் பெருமைபற்றி அவ்வாறு அடைந்தனர் என்றலுமாம். "அண்ட முறநிமிர்ந் தாடு கின்ற கோலம்" (1779) என்று தொடர்ந்து கூறுவதனாலும், "ஆதியோ டந்த மில்லான் அருண்ட மாடும் போது." (1782) என்று முடித்துக் கூறுவதனாலும் ஆசிரியர் இக்குறிப்புப் பெற வைத்தமையும் காண்க.

அன்றே - அப்பொழுதே, வழிபடும் அன்பினாற் கயிலையினை அடைவதற்கு "மனத்தினுங் கடிது சென்று" (1771) புகுந்த அம்மையார், அங்கு அருளப்பெற்ற பேற்றைப் பெறுவதற்கு அதனினும் கடிது சென்றடைதல் இயல்பாதலின் அப்போதே அடைந்தனர் என்க.

அன்றே அடைந்தார் - என்றதனை முறைமாற்றி உரைத்த குறிப்புமது. "திருக்கண்ணோக் குற்ற கன்றே" (1772) என்றபடியே இங்குக் கூறிய கருத்தும் அது. அன்றே - அசை என்றொதுக்குவாருமுளர்.

புக்கு - திருக்கோயிலினுள் முறைப்படி புகுந்து என்றும், அடைந்தார் - திரு முன்பு அடைந்தனர் என்றும், வருவித்துக்கொள்க. அம்மையார் பேரன்பின் ஆர்வமிகுதிப் பாட்டால் விரைந்து புகுந்தாராதலின் வணங்குதல், வலம் வருதல் முதலிய செயல் முறைகளை விரித்துக் கூறாது வினை முடிபுகளாற் பெறவைத்த நயமும் காண்க. கயிலையில் விடைகொண்ட அம்மையார் போதலும், இங்கு நடந்து புகுந்து திருமுன் அடைதலும் ஆகிய இவற்றை இவ்வொரு திருப்பாட்டிற் பெறவைத்த குறிப்பும் அவ்விரைவு மிகுதியினைக் குறிப்பாலுணர்த்தியதுடன் அவ்விரண்டு தலங்களின் ஒப்புமை குறித்ததுமாம்.

62

1779.

ஆலங்கா டதனி லண்ட முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது" கொங்கை திரங்கி" யென்றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்று நடம்போற்றி வாழு நாளில்,

63

வேறு

1780.

 மட்டவிழ்கொன் றையினார்தந் திருக்கூத்து முன்வணங்கும்
 இட்டமிகு பெருங்காத லெழுந்தோங்க வியப்பெய்தி
"யெட்டியில வம்மீகை" யெனவெடுத்துத் திருப்பதிகங்
"கொட்டமுழ வங்குழக னாடு"மெனப் பாடினார்.

64

1779. (இ-ள்.) ஆலங்காடதனில்...காண்பொழுது - திருவாலங்காட்டின் மேல் அண்டங்களிற் பொருந்தத் திருவடியை மேல் நிமிர்த்தி ஆடுகின்ற கூத்தின் திருக்கோலத்தைக் காணப்பெற்ற அப்பொழுது, "கொங்கை திரங்கி" என்று எடுத்து - கொங்கை திரங்கி என்று தொடங்கி; தங்கும்...பாடி - தாம் தங்கும் மூலத்தைக் காண்பதற்கு அரியவராகிய இறைவரை நன்மையுடைய மூத்த திருப்பதிகத்தைப் பாடி; ஞாலம்...நாளில் - உலகம் காதல்கொண்டு போற்றும் திருக்கூத்தைப் போற்றிக் கொண்டு எழுந்தருளியிருக்கும் நாளில்,

63

1780. (இ-ள்.) மட்டு அவிழ்...எழுந்து ஓங்க - மணம் விரிகின்ற கொன்றை மலர் மாலையினையுடைய சிவபெருமானது திருக்கூத்தினை நேரே வணங்கப்பெற்ற விருப்பம் மிகும் பேராசையானது மேன்மேலும் பொங்கி மிக்கதாக; வியப்புஎய்தி -