"இந்நெடுநாள்......இது? - இந்நீண்டநாளும் தீவினையே விளங்கிய சித்தமுடையான், இப்பெரிய திருவினையடைவதனுக்கு எவ்வாறு தகுதியடையேன் என்பது. திரு இதனையும் தீவினையேன் அடைவதுவோ? என்க. தீவினை - சமணம் புக்குச் சிவனை இகழ்ந்தமை குறித்தது. என்று - திருவின் அளவற்ற பெருமையினையும் தமது அளவற்ற சிறுமையிணையும் எண்ணினார்; அவ்வாறு எண்ணியபோது அதன் நுழைவு திருவருளின் பெருமையேயாம் எனவும், அந்தப் பெருமை சிவாபராதம் செய்த இராவணனையும் ஆட்கொண்ட தன்மையால் விளங்குவதாம் எனவும் அறிந்தனர்; அதனைத் துதித்தனர் என்க. அத்தன்மையனாய இராவணன் - தம்மைப்போலவே சிவபெருமானது பெருமையினை அறியாது பிழைசெய்த அந்தத் தன்மையுடைய இராவணன். கருணைத்திறமான அதன் மெய்த்தன்மை - தம்மை இகழ்ந்து பெரும் பிழை செய்தவனாயினும், அடைந்து துதித்தபோது அவனது பிழையினைப் பொறுத்து அருளியதுடன், வாளும் நாளும் வரமும் கொடுத்த கருணையின் மெய்ம்மை. "மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற், கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட, அண்ணலவற் கருள்செய்த ஆக்கப்பாடு" (திருஞான - புரா - 77) என்று இதனை ஆசிரியர் பின்னர் மற்றொரு வகையால் விரித்துக் கூறுதல் காண்க. மெய்த்தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு - அறிந்து - பிழை செய்த இராவணனுக்கு அருளியதுபோல, சமணம் சார்ந்து இகழ்ந்து பிழைசெய்த தமக்கும் அருளுவது அவரியல்பென்பதும், பிழைசெய்த இராவணனுக்கு அருள் புரிந்ததுபோல அவனுக்கு முன்னைநிலையில் அந்தப் பிழையினின்றும் தப்பும் உபாயமறிவித்துப் பிழைபுரிந்த தமக்கும் அருள்வது அருளியல்பின் மெய்த்தன்மையா மென்பதும், அறிந்து என்ற குறிப்பினாற் பெறப்படும் என்பர். அறிந்து துதிப்பதுவே - "ஒறுக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்" (திருவிருத்தம் - ஒற்றியூர் 10). ஆளுடைய பிள்ளையார் இராவணனது வரலாற்றைத் தமது திருப்பதிகங்களில் எட்டாவது பாட்டுக்கள்தோறும் வைத்துப் பாடியருளிய தன்மைக்கும், அப்பர் சுவாமிகள் அவ்வரலாறுகளைப் பத்தாவது பாட்டாகிய திருக்கடைக்காப்பில் பதிகந்தோறும் வைத்துப் பாராட்டிய தன்மைக்கும் வேறுபாடு காணப்படும். "ஆர்த்தா னரக்கன் றனைமால் வரைக்கீ முடர்த்திட் டருள்செய் தவது கருதாய்" என்பது நாயனார் திருவாக்கு. பிழை செய்தமைக்காக மழைக்கீ முடர்த்திட்ட தண்டனையும், தம்மை அடைந்தமைக்காக அருள்செய்ததும் நிகழ்ந்ததுபோல, "முன்னம்மடியே னறியாமையினால் முனிந்தென்னை நலிந்து" சூலையினால் வருத்திய தண்டனையும், பின்னை உமக்காட்பட்டு அடைந்தமையால் அருளும் செய்தீர் என்று இவ்வாறு மெய்த்தன்மை அறிந்து துதித்தனார். "கடுகிய தேர்செலாது; கயிலாயமீது கருதே! லுன்வீர மொழிநீ! முடுகுவ தன்று தன்ம" மென நின்று பாகன் மொழிவானை நன்று முனியா, "விடுவிடு" வென்று சென்று விரைவுற் றாக்கன் வரையுற் றெடுக்க" (பொது - தசபுரா - 10 - பழம் பஞ்சுரம்), "மலையைப் பற்றி, யார்த்திட்டான் முடிகள். பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத், தேத்தெத்தா வென்னக் கேட்டார்" (மேற்படி - பயற்றூர் 10), "மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு, நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான், மறித்திறை யூன்றினா னேன் மறித்துநோக் கில்லை யன்றே" (மேற்படி - கயிலை - 3) (குறிப்பு - இப்பதிக முழுமையும் இவ்வாறே இவ்வரலா றொன்றனையே கண்டவார் கூறுவதுபோலக் கூறுவது), "கண்வழி குருதி சோரக் திருவருள் சிறிது வைத்தர்" (மேற்படி - திருப்புகலூர் - 10), "ஆர்த்தவா யலறு விப்பார்" |