பக்கம் எண் :


திருவிரட்டை மணிமாலை955

 

இரைத்தல் - சீறுதல்; விரைக்கின்ற - மணம் வீசுகின்ற; ஓட்டந்து - ஓட்டம் தந்து என்பது ஓட்டந்து என நின்றது; ஓடி; தலை - ஏழனுருபு; வேதியன் - ஞானத்தலைவர்; வேதங்களாற் போற்றப்பட்டவன் என்றலுமாம். ஞானத் தலைவராதலின் பாம்பு உம்மைத் தீங்கு செய்யாமல் வைக்க வல்லவர் என்பதனை நான் அறிவேன்; ஆயினும் எனது அன்பினால் பாம்பினைத் தொடாதீர் என வேண்டிக்கொண்டேன் என்பது குறிப்பு. "ஓடுநீ ருடன்செ லாது நிற்குமேர வோலை யென்பார், நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்ல ரென்பார்" (திருஞான - புரா - 807); இக்கருத்துப் பற்றியே எம் பொருட்டால் "உரைக்கப்படுவது ஒன்றுண்டு கேட்கில்" என்து தொடங்கினார்.

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை யாதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாப்புக்கு மலவனு மாட்டாது
கில்லேன மாவென்றான் கீழ்.

8

(இ-ள்.) ஞானத் தலைவரும், மறைகளுக்குப் பொருளாவாரும், மறைகள் தோற்றுதற்குக் காரணரும், திருவாதிரையாகிய நன்னாளினை யுடையவரும் ஆகிய சிவபெருமானை அளவு காண்பேன் என்று வலிய பன்றியுருவம் எடுத்து மண்ணைத்தோண்டி உள்ளே புகுந்து அளவு காணமாட்டாது திருமாலும் "நான் அறியகில்லேன் போற்றி" என்று கீழ்வீழ்ந்து வணங்கினான்.

வேதியன் என்றது முதலாகச் சொல்லிய மூன்றாலும் ஞானப்பொருளாய்ப் பசு ஞானத்துக் காப்பாற்பட்டு நின்ற நிலையுடைய வராதலின் அவருடைய சகளத்திருமேனிதானும் அறிதற்கரிது என்பதாம். வேதப்பொருள் - வேதத்தால் நுவலப்படுபொருள். "ஞானத்திரளாய் நின்ற பெருமான்" (தேவா - பின் - அண்ணா). ஆதிரை நாளான் - "ஆதிரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே" (காந்தாரம் - அப்பர்) சோதிப்பான் - சோதித்தற்பொருட்டு. சோதித்தல் - அடிசெல்லுமளவுகாண்டல். கில்லேன் - அறிய மாட்டேன். கில் - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல்; நமா - போற்றி - வந்திக்கின்றேன். கீழ் - வணங்குதலின் கண். கில்லேன் - அம்ம - என்றுரைத்தனர் முன் உரைகாரர்.

8

கீழா யினதுன்ப வெள்ளக் கடற்றள்ளி யுள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்!விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டனெண் டோளன்பைப் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே.

9

(இ-ள்.) துன்ப வெள்ளமாகிய கடலினுள்ளே தள்ளப்பட்டு வீழாமல் மேலிருந்து இன்பம் பெறவேண்டுமென்று விரும்புகின்றவர்களே! சிவபெருமானின் பாதங்களைத் தாமதியாமல் வணங்கிப் பணிந்து பலகாலமும் தலைப்பட்டு அந்நிலையில் உறைத்து நில்லுங்கள்.

என்பீர்! நின்மின் - என்க; என்பீர் - விளி. துன்பக்கடல் - பிறவி. இன்பம் - வீடுபேறு. இறைஞ்சுதல் - மனத்தாலும் வாக்காலும் வணங்குதல் குறித்தது. தலை நிற்றல் - சலியாது சிறந்து நிற்றல்; தாழாமல் - பொழுது போக்காமல். "தாழாதறஞ் செய்மின்" (தேவா - நம்பிகள்). பன்னாளும் - எக்காலமும்.

9

தலையாய வைந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் . தலையாய