என்பது வேறு பொருள் குறியாது நிற்றலின் அசைபோலும் என்றுரைத்தனர் முன் உரைகாரர். ஆறாடுதல் - முதலாகவரும் சங்கற்ப மாத்திரையானே சிருட்டி சங்கார முதலியன செய்யும் பேராற்றலுக்கு இருப்பிடமாகிய உமக்கு அரக்கனை அடர்த்தலுக்கு அடித் தலத்தால் அமிழ்த்த வேண்டிய சிறு செயல் தானும் வேண்டற்பாலவன்றே என்பார் அடித் தலத்தில் முரித்தவாறு என்? என்றார். ஆறு - கங்கை. ஆறு ஆடுதல் - கங்கை சடையிற்றோய நிற்றல்; ஆறா அனல் - நித்திய சங்காரம். நீறாடுதல் - மகா சங்காரத்தையும், நெய்யாடுதல் புனருற்பவத்தையும் குறித்தன. 14 நீநின்று தானவர் மாமதின் மூன்று நிரந்துடனே தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப் பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம் போய்நின்று பூதந் தொழச்செய்யு மொய்கழற் புண்ணியனே. 15 (இ-ள்.) பேய் பாடவும் பூதந் தொழவும் பெயர்ந்து பெருங்காடு அரங்காக நட்டம் செய்யும் மொய் கழலையுடைய புண்ணியரே! அரக்கர்களுடைய மூன்று புரங்களும் உடனே வேகும்படி நீர் நின்று வில்லும் அம்பும் தொடுற்தவாறு என்னே? இதுவும் மேற்பாட்டின் கருத்தினையே திரிபுரங்களையும் எரித்தவாற்றால் விளங்க அருளியது. தானவர் - அரக்கர்கள், முப்புர வாணர்கள். வேவச் சிலை தொட்டவாறு என்? - அம்பு எய்யாமலே! தொடுத்த மாத்திரத்தில் தீப்பற்றி வேகும்படி. சிலைதொட்ட என்றதனால் அன்பும் உடன் கொள்ளப்படும். தொட்ட - தொடுத்த கோத்த. கையால் தீண்டிய அளவு என்ன இலேசுபடக் கூறியதும் காண்க. தொடுத்தல் தானும் வேண்டப்படுவதன்று என்பது. பேய் பாட - பூதம் தொழ - நட்டம் செய்தல் சங்காரம் குறித்தது. திரங்கு வல்வாய் - திரங்கிய பெரிய வாயினையுடைய. நட்டம் - செய்யும் - என்று கூட்டுக. நிரந்து - என்ற குறிப்பினால் முப்புரங்களிலுள்ளார் எல்லாரும் வேவ, அவற்றுள், அன்புடையார் ஒரு மூவர் வேவாதிருக்க என்பதும் பெறப்படும். 15 | புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே எண்ணியோ ரைந்து மிசைந்தனவாற் - றிண்ணிய கைம்மாவி னீருரிவை மூவுருவும் போர்த்துகந்த வம்மானுக் காட்பட்ட வன்பு. |
16 (இ-ள்.) முன் பல காலங்களிலும் செய்தனவாகிய சிவ புண்ணியங்களும், பொய்ந்நெறிக்கண் சாராது எண்ணி ஓர்கின்ற திருவைந்தெழுத்தும் பொருந்தியமையினாலே சிவபெருமானுக்கு ஆட்பட்ட அன்பு விளைந்தது. விளைந்தது என்பது இசை யெச்சம். அன்பினால் என்று மூன்றனுருபுகூட்டியும், ஐந்து என்பதற்கு ஐம்புலன் என்று கொண்டும், ஆட்பட்ட அன்பினால் புலனொருப்பட்டவே யன்றிச் சிவ புண்யமும் பயனாயின என்று உரைப்பர் முன் உரைகார். மூவுரு - அயன் - அரி - அரன் என்ற மூன்று நிலையும் கூடி முதல் உருவம். "மூவுருவின் முதலுருவாம்" (தேவா). திருமாலும் உமையும் தாமும் என்ற முன்றென்பர் முன் உரைகாரர். 16 அன்பா லடைவதெவ் வாறுகொன்? மேலதோ ராடரவந் தன்பா லொருவரைச் சாரவொட் டாதது வேயுமன்றி முன்பா யினதலை யோடுகள் கோத்தவை யார்த்துவெள்ளை யென்பா யினவு மணிந்தங்கொ ரேறுகந் தேறுவதே. 17 |