அம்மை மூத்த திருப்பதிகம் - 1
திருவாலங்காடு
(திருத்தலத்தைப் போற்றியது) பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பாடுயர் நீள்கணைக் காலொர் பெண்பேய்தங்கி யலறி யுலறு காட்டிற் றாழ்சடை யெட்டுத் திசையும் வீசியங்கங் குளிர்ந்தன லாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
1
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையைவிள்ள வெழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிட முற்றுஞ் சுளிந்து பூழ்தியள்ளி யவிக்கநின் றாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங்காடே.
2
வாகை விரிந்துவெண் ணெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை யாங்கேகூகையொ டாண்டலை பாட வாந்தை கோடதன் மேற்குதித் தோட வீசியீகை படர்தொடர் கள்ளி நீழ லீம மிடுசுடு காட்ட கத்தேயாகங் குளிர்ந்தன லாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
3
குண்டிலோ மக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன வதனை முன்னேகண்டிலோ மென்று கனன்று பேய்கள் கையடித் தோடிடு காட ரங்காமண்டல நின்று குணால மிட்டு வாதித்து வீசி யெடுத்த பாதமண்ட முறநிமிர்ந் தாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
4
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு வெண்டலை மாலை விரவப் பூட்டிக்கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவ ளர்த்துப்புழுதி துடைத்து முலைகொ டுத்துப் போயின தாயை வரவு காணாதழுதுறங் கும்புறங் காட்டி லாடு மப்ப மனிடந்திரு வாலங் காடே.
5
பட்டடி கெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு கூகை பகண்டை யாந்தைகுட்டி யிடமுட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டிற்பிட்டடித் துப்புறங் காட்டி லிட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி யாங்கேபட்டமே பாயநின் றாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
6
சுழலு மழல்விழிக்கொள்ளி வாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட்டோடியாடித்தழலு ளெரியும் பிணத்தை வாங்கித் தான்றடி தின்றணங் காடு காட்டிற்கழலொலி யோசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டமழலுமிழ்ந் கோரி கதிக்க வாடு மப்ப னிடந்திரு வாலங் காடே.
7
நாடு நகருந் திரிந்து சென்று நன்னெறி நாடி நயந்த வரைமூடி முதுபிணத் திட்ட மாடே முன்னிய பேய்க்கணஞ் சூழச் சூழக்காடுங் கடலும் மலையு மண்ணும் விண்ணுஞ் சுழல வனல்கை யேந்திபாடு மரவப் புயங்க னெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
8
துத்தங் கைக்கிளை விளரி தார முழையிளி ஓசைபண் கெழுமப் பாடிச்சச்சரி கொக்கரை தக்கை யோடு தகுணிதந் துந்துபி தாளம் வீணைமத்தளங் கரடிகை வன்கைமென்றோற் றமருகங் குடமுழா மொந்தை வாசித்தத்தனை விரவினோ டாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
9
புந்தி கலங்கிப் பொறிம யங்கி யிறந்தவ ரைப்புறங் காட்டி லிட்டுச்சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவ ரிட்டசெந் தீவி ளக்காமுந்தி யமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க வார்க்கசத்தியின் மாநட மாடு மெங்க ளப்ப னிடந்திரு வாலங் காடே.
10
ஓப்பிணையில்லவன் பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்துப்பப்பிணை யிட்டுப் பகண்டை பாடப் பாடிருந் தந்நரி யாழ மைப்பவப்பணை யணிதிரு வாலங் காட்டு ளடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்ப மெய்து வரே.
11