விளைவுகளில் உலகநிலையின் நிகழக்கூடிய ஐயப்பாடுகளைக் குறித்தன என்று இங்கு ஆராய்ச்சி செய்வாருமுண்டு. அவ்வாறல்லாமை மேல்ஆண்டு விளக்கப்படும். களவு - பிறன் பொருள் வௌவுதல்; பொய் - மெய்ம்மையின் மாறுகோள்; கோபம் - தகாத சினம்; காமம் - தீயவற்றில் விருப்பம். நிறைகோல் - மக்கள் - "தக்கார் தகவில ரென்ப தவரவ, ரெச்சத்தாற் காணப்படும்" (குறள்) என்றபடி தமது தகவினை அறிதற்குத் துணைசெய்யும் துலாக்கோல் போன்ற மக்கள் என்பதும் குறிப்பு. இச்சரித விளைவினுள் வரும் அப்பூதியாருடைய முதல் மகனது தன்மைகளைக் குறிப்பினு ளறிவித்தபடியுமாம்; (1806 - 1809 பாட்டுக்கள் பார்க்க); அளவைகளாகிய நிறைகோல் என்று கூட்டியுரைப்பர் முன் உரைகாரர். அளவைகள் என்றமையால் அக்கருவிகள் எல்லாம் அடங்குமாதலானும், நிறைகோலினை வேறு எடுத்துக்காட்டச் சரித இயைபும் சிறப்புமின்மையானும் அது பொருந்தாமை யறிக. அளவைகளுக்கு இவ்வாறு உயர் பெயரிடும் வழக்கு முற்காலக் கல்வெட்டு முதலிய சரிதச் சான்றுகளாலறிக.1 மக்கள் ஆவொடு மேதி - இவை உயிர்ச் சார்புகள். (முன் சொன்ன அளவை முதலியவை உயிரில் பொருட் சார்புகள்.) சிறப்புப்ற்றி மக்களை முதலில் வைத்தார். ஆவொடு மேதி - என்று ஒடு வுருபை ஆவுடன் சேர்த்தியதும் சிறப்புப் பற்றி. மற்றும் உள ஏனைப் பொருட் சார்புகள். "திருநாவுக்கரசு திருவீதி" என்ற ஒரு கல்வெட்டுச் செய்தியால் இவ்வாறுள்ள வழக்கு உறுதிப்படுகின்றது. (40321 : திருவதிகை வீரட்டானம்). அரசு - திருநாவுக்கரசு. நாமம் சாற்றும் - நாமத்தை இட்டு அழைக்கும். அவையெல்லாம் நாமத்தை எடுத்துச் சொல்லும் என்ற குறிப்புமாம். ஒழுக்கல் ஆறு - ஒழுகும் நெறி. ஆற்றார் - நெறியின் நின்றவர். குற்றம் காய்ந்தார் - குணத்தின் மிக்காராதலின் அதன் பயனாகக் குற்றங் காய்ந்தனர் என்றும், அன்பினராயுள்ளாராதலின் அரசினாமம் சாற்றும் அவ்வொழுக்க நெறியினின்றார் என்றும் முன் பாட்டுக் காரணமும், இப்பாட்டுக் காரியமும் ஆக நின்றமுறை காண்க. குணம் - குற்றம் காய்வதனையும், கலந்த அன்பு - நாமமே சாற்றுவதனையும் விளைத்தன. சாத்துமிவ் வொழுகலாற்றார் - என்பதும் பாடம். 2 1785. | வடிவுதாங் காணா ராயு மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையுந் தம்பி ரானா ரருளுங்கேட் டவர்நா மத்தாற் படிநிகழ் மடங்க டண்ணீர்ப் பந்தர்கண் முதலா யுள்ள முடிவிலா வறங்கள் செய்து முறைமையால் வாழு நாளில்; |
3 வேறு 1786. | பொருப்பரையன் மடப்பிடியி னுடன்புணருஞ் சிவக்களிற்றின் றிருப்பழனம் பணிந்துபணி செய்திருநா வுக்கரசர் ஒடுப்படுகா தலிற்பிறவு முடையவர்தம் பதிவணங்கும் விருப்பினொடுந் திங்களூர் மருங்குவழி மேவுவார்; |
4 1. | "...தக்ஷிணமேரு விடங்கள் என்னும் கல்லால் நிறை எடுத்தும், பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை எடுத்தும்" (S.I.I.Vol. II. No. 38 1014 A.D.) இராசராசர் காலத்துக் கல்வெட்டு முதலியவை காண்க. |
|