"அறியா முன்னே" (1783) என்ற விடத்தில் போந்த முன்னைத் தவத்தின் குறிப்பும் கருதுக. இத்தவம், முன்னைப் பிறவியிற் செய்தனவும், இப்பிறவியிற் செய்தனவுமாம். இப்பிறவியிற் செய்தவை போதா; ஆதலின் முன்னும் செய்திருத்தல் வேண்டுமென்றது குறிப்பு. முடிவில் என்ற குறிப்புமது. முன் பொழியும் கருணை புரி - முன் - முன்பாக. தேற்றமாக அறியும்படி என்றும்; கருணை பெறுவோர் வந்த அடைந்து கேட்பதன்முன் என்றும் உரைக்க நின்றது. அப்பூதியார் தேடிச் செல்லாது அரசுகள் தாமே மனைக் கடைத் தலையில் வந்தடைந்த அருளின் நிறம் பற்றிய உண்மைக்குறிப்பு பொழிதல் மிகுதியாக மாரி பொழிவது போல வழங்குதல் என்பது குறிப்பு. புரிதல் - "எப்பொழுதும் மேற்கோடல்"; "போக்கு வரவு புரிய" (போதம். 2 - சூத் - சிற்றுரை). வடிவுடையீர் - அரசுகளது திருவடிவின் காட்சியின் றுணையாலே அப்பூதியார் இத்துணையும் போற்றி வழிபட்டது. "பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால், இவனெனைப் பன்னாளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே" (தனித்திருவி) என்ற அரசுகளது திருவாக்கின் இலக்கியமாகிய ஆண்டவரைப் போலவே அரசுகள் தாமும் விளங்கி யதெய்வவருட் கருணைத் திறம் ஈண்டுக் கருதிப் போற்றப்பாலது. வந்தருளிற்று - தாமே வந்தது; அருளிற்று - என, இனிச் செய்ய நிற்பதாகிய பேரருளின் றிறத்தையும் விரைவுபற்றி இறந்த காலத்தாற் கூறிய குறிப்புமாம். என்! - வினா. அதிசயக் குறிப்புப்பட வந்தது. ஈதென்ன அதிசயம் என்க. அது முடிவில் தவஞ் செய்தேன் கொல்? என்ற ஐயப்பாட்டினைத் தொடர்ந்து கூறியதனாலும் அறிக. இனி, என்? என்றற்கு நீர் வந்த காரணம் என்னை? என்றுரைத்தலுமாம். 10 1793. | "ஒருகுன்ற வில்லாரைத் திருப்பழனத் துள்ளிறைஞ்சி வருகின்றோம்; வழிக்கரையி னீர்வைத்த வாய்ந்தவளந் தருகின்ற நிழற்றண்ணீர்ப் பந்தருங்கண் டத்தகைமை புரிகின்ற வறம்பிறவுங் கேட்டணைந்தோ" மெனப் புகல்வார், |
11 1794. | "ஆறணியுஞ் சடைமுடியா ரடியார்க்கு நீர்வைத்த ஈறில்பெருந் தண்ணீர்ப்பந் தரினும்பே ரெழுதாதே வேறொருபேர் முன்னெழுத வேண்டியகா ரணமென்கொல்?" கூறு" மென வெதிர்மொழிந்தார் கோதின்மொழிக் கொற்றவனார். |
12 1793. (இ-ள்.) ஒரு...வருகின்றோம் - ஒப்பற்ற மாமேருமலையை வில்லாகவுடைய சிவபெருமானைத் திருப்பழனம் என்னும் தலத்தில் வணங்கிக்கொண்டு வருகின்றோம்; வழிக் கரையில்...கண்டு - வரும் வழியின் கரையில் நீர் வைத்திருக்கும் வாய்ப்புடைய வளத்தைத் தரும் நிழலையுடைய தண்ணீர்ப் பந்தரினைக் கண்டும்; அத்தகைமை...கேட்டு - அத்தன்மையாற் புரிகின்ற அறங்கள் பிறவற்றையும் கேட்டும்; அணைந்தோம் எனப் புகல்வார் - இங்கு வந்தணைத்தோம் என்று சொல்வாராகி, 11 1794. (இ-ள்) ஆறு அணியும்...எழுதாதே - கங்கையைத் தரித்த சடை முடியாரின் அடியவர்களுக்காக நீர் வைப்பித்த முடிவில்லாத பெருமையுடைய தண்ணீர்ப் பந்தரில் உமது பெயரை எழுதாமல்; வேறொரு பேர்...என்கொல்; கூறும் என - வேறு ஒரு பெயரை முன் எழுத வேண்டிய காரணம் என்னை |