கும் பயன்படுமாயினும், சிறப்பும் தலையாகிய பயனும்பற்றி அடியார்க்கு என்றார். வணங்கி வழிபடத்தக்கார் அவர்களேயாம். அவர்களையே குறிக்கொண்டார் என்பது. ஈறில் பெரும் என்றது தண்ணீர்ப்பந்தரின் சிறப்பு அமைதியும், முத்தி சாதனமாகும் பெருமையும் குறித்தது. தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் - என்றும், பந்தரினும் பேர் எழுதாதே என்றும் உரைக்க நின்றது. பந்தரினும் - உம்மை உயர்வு சிறப்பு. பயன் பற்றாமலே பல இடத்தும் தம் பெயரை விளம்பரப்படுத்திக்கொள்வோர் நிற்க, நீர் அடியார்க்காக அமைத்த அரிய பந்தரில் தானும் எழுதாதே என்பது குறிப்பு. முன் எழுத - முன்புறம் எழுத. முன்னால் விளக்கமாக எழுத என்றனுமாம். உமது பேர் எழுத வேண்டிய முன்பக்கத்து - முகப்பில் - என்பது. எதிர் - எதிரில் என்றும், அப்பூதியார் கருதிய கொள்கைக்கு எதிர்மறையாக - மாறுபாடாக - என்றும் உரைக்க நின்றது. கோதில் மொழீக் கொற்றவனார் - இவர் கூறிய மொழிகள் அப்பூதியார் அன்பு பற்றி வெகுள்வதற்கு ஏதுவாயினவேனும், அவ்வாறு தீங்கு குறியாத மொழிகள் என்பது. தீமையில்லாத சொற்களையே சொல்லுதலில் வல்ல அரசர் என்க. கோதுஇல் மொழி தீமையை - குற்றத்தை - இல்லையாகச் செய்யும் மொழி என்ற குறிப்பும், பின் 1798-இல் கூறுவனவும், 1817-இல் அருள் விளைப்பனவும் ஆகிய சரிதக் குறிப்பும் பட நின்றன. வேறு ஒரு பேர் - "நாவுக்கரசு" என்று "உலகேழினுநின்னன் னாமங்கணயப்புற நண்ணுக" (1339) என்று இறைவர் ஏனையோரின் வேறாகத் தனிச் சிறப்புப்பெற வைத்த ஒப்பற்ற பெயர் என்ற வாய்மையும் காண்க. எழுத வேண்டிய காரணம் என் கொல்? - "இதற்கென்னோ கருத்து" (1790) என்று உண்மை தெரியும் நோக்கத்துடன் சென்றமையால் இவ்வாறு கேட்டனர். என் கொல்? - அவ்வாறு எழுத வேறு இயைபில்லாமையும், ஆயினும் எழுதப்பட்டு இயைந்தமையால் காரணம் புலப்படாமையும் தோன்ற என்கொல்? என்று ஐயப்பாட்டிற் கூறினார். 12 1795. | நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய் "நன்றருளிச் செய்திலீர்!; நாணிலமண் பதகருடன் ஒன்றியமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி னுறைப்பாலே வென்றவர்தந் திருப்பேரொ "வேறொருபேர்?" எனவெகுள்வார், |
13 1796. | "நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச் செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்" எனவிளம்பி, |
14 1797. | "பொங்குகடற் கன்மிதப்பிற் போந்தேறு மவர்பெருமை யங்கணர்தம் புவனத்தி லறியாதா ரியாருளரே! மங்கலமாந் திருவேடத் துடனின்றிவ் வகைமொழிந்தீர்; எங்குறைவீர்? நீர்தாமியார்? இயம்பு"மென வியம்பினார். |
15 1795. (இ-ள்.) நின்ற...சிந்தையராய் - நின்ற அப்பூதி மறையவர் அதனைக் கேட்டுச் சிந்தைதன் னிலை யழிந்தவராகி; "நன்றருளிச் செய்திலீர்...வேறொரு |