பக்கம் எண் :


978திருத்தொண்டர் புராணம்

 

பேர்?" என வெகுள்வார் - நீர் நன்கான மொழிகளை அருளிச் செய்திலீர்! நாணமில்லாத சமணர்களாகிய சண்டாளர்களுடன் சேர்ந்தஅரசன் செய்த சூழ்ச்சிகளையெல்லாம் திருத்தொண்டினது உறைப்பினையே துணையாகக் கொண்டு வென்ற அவரது திருப்பெயரோ வேறொரு பேர் என்று சொல்லத்தக்கது?" என்று வெகுள்வாராகி,

13

1797. (இ-ள்.) பொங்குகடல்...யாருளரே - பொங்கும் கடலினைக், கல்லே மிதப்பாகக் கொண்டு போந்து கரையேறிய அவர் பெருமையினைச் சிவபெருமானது புவனத்தில் அறியாதவர்கள் யாரேனுமுளரோ?; மங்கலமாம்...மொழிந்தீர் - மங்கலமாம் திருவேடத்துடன் நின்றும் இவ்வகையாக மொழிந்தீர்; எங்கு உறைவீர் - நீர் எவ்விடத்துள்ளவர்?; நீர்தாம் யார்? - நீர்தாம் யாவர்?; இயம்பும் - சொல்வீராக; என இயம்பினார் - என்ற சொன்னார்.

15

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

1795. (வி-ரை.) நின்ற - அடியவர் ஒருவர் என்ற நிலையில் வரவேற்று உபசரிக்க, அரசுகளினெதிரில் மனைக்கடைத்தலையில் நின்ற.

மறையவர் - மறத்துப் பேசவுள்ள குறிப்பு.

நிலையழிந்த சிந்தையராய் - உலகில் மக்கள் எவரேயாயினும் சிந்தையை நிறுத்த வேண்டிய பொறை முதலிய நிலையினின்றும் எக்காலத்தும் அழியலாகாது; அதிலும் சிவனடியார்கள் சிறப்பாக எஞ்ஞான்றும் சிந்தைநிலை யழியலாகா மரபுடையோராதல் வேண்டும்; "மலையே வந்து விழினு மனிதர்காள், நிலையினின்று கலங்கப் பெறுதிரேற், றலைவ னாகிய வீசன் றமர்களைக், கொலைகையானை தான் கொன்றிட கிற்குமே" என்பது வாகீசர் திருவாக்கு (தனிக்குறுந்). மேலும், அடியவர்களின் திருமுன்பு, அன்பராயினோர் ஆசையொடும் அடைந்து, கூசிமொழிந்து கும்பிட்டு நிற்கக் கடவர்; இத்தன்மை யெல்லாம்விட இங்கு அப்பூதியார் சிந்தைநிலை யழிந்தமை என்னையோ? எனின்; மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறா மனம்" தரவேண்டும் மென்று நந்திதேவர் வரங்கேட்ட படி, இங்குத் "திருநாவுக்கரசர்" என்ற திருப்பெயரை "வேறொரு பெயர்" என்றுசொன்னதைப் பெரு நிந்தனையாகக் கொண்டதனால் அப்பூதியார் மனம் நிலையழிந்ததென்க. சிவனையும் அடியாரையும் சிவ நூல்களையும் யாரேனும் நிந்தனை செய்வாராகில் அதைக் கேட்கலாகாது; கேட்டுச் சும்மா இருத்தல் பாவமாம். சத்திநாயனார் சிவ நிந்தனை புரிவோர்களது நாக்கை அறுத்தனர். இந்நாட் சைவ வுலகம் எனப்படுவது சிவ நிந்தனைகளை உளம் பதைக்காமல் வாளா கேட்டுச் சும்மா இருப்பதே யன்றித், தானுடம் பலவாற்றானும் சிவ நிந்தனைகளைச் செய்கின்றது; காலத்தின் கொடுமை! ஆதலின் அப்பூதியார் கொண்ட மனப்பான்மையின் தத்துவம் இந்நாளில் விளங்குதல் அரிது. தம்மையேனும், தம் உடலோடொழியும் மனைவி மக்கள் - சுற்றத்தார்களையேனும் ஒருவர் நிந்திக்கக் கேட்டால் எத்தனை கோபமும் கலகமும் விளைக்கின்றார்கள். அவ்வாறன்றி உயிரினுடன் வரும் இறைவனையும் நமது உயிரின் சுற்றமாகிய அவன் அடியார்களையும் நிந்திக்கக் கேட்டால்