பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்979

 

சிறிதும் எண்ணாது வாளா இருத்தல் எத்தனை மடமையும் பாவமுமாகும்! நிறையழிந்த. என்பதும் பாடம். நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் சீலம்.

நன்றருளிச் செய்திலீர் - தீங்கு சொன்னீர் என்னாது இவ்வாறு சொன்னது நிலையழிந்த சிந்தையராகியபோதும் அடியார் திருவேடத்தின்கண் அப்பூதியார் வைத்த அன்பின் நிலை.

நாண் இல் அமண் பதகர் - நாணமில்லாமையாவது தாம் செய்த வஞ்சனை வெளிப்பட்டபோதும் அதனால் நாணித் தலைகவிழ்ந்து ஒழியாது பின்னரும்மேன்மேலும் ஒவ்வொன்றாகப் பொய் கூறி வஞ்சிக்க முற்படுதல். 1347 - 1367 - 1373 - 1385 (மானமழிந்து - புலம்ப) - 1389 முதலியவற்றிற் கூறப்பட்டவை.

சூழ்ச்சி - கொலை சூழ்ந்து செய்த உபாயங்கள்.

திருத்தொண்டின் உறைப்பாலே - சிவன் திருவடிகளிற் பதிந்த திருத்தொண்டின் அழுத்தமே துணையாகக்கொண்டு. தொண்டாவது திருவடியிணையே பற்றிக் கிடத்தல். "என்கடன் பணிசெய்து கிடத்தல் - தன்கடன் அடியேணையுந் தாங்குதல்" (அப்பர்) என்ற மன உறுதி.

சூழ்ச்சிகளை வென்றமை நாயனார் புராணத்துள் விரிக்கப்பட்டன. இவற்றை அடியார்கள் சொல்லக் கேட்ட தன்மையால் அப்பூதியார்க்கு வாகீசர்பாற் பத்தி முதிர்ந்த தென்பதாம். காரணம் என்? என்றார்கள் ஒன்றாக முதலில் ஒரு காரணங் கூறியது காண்க.

திருப்பேரோ வேறொரு பேர்? - அப்பூதியார் வெகுண்டமைக்குக் காரணம் கூறியபடி.

வெகுள்வார் -விளம்பி இயம்பினார் என இம்மூன்று பாட்டுக்களையும் முடிக்க.

1796.(வி-ரை.) நம்மை யுடையவர் - சிவபெருமான்; முன்னின்று இவ்வகை மொழிந்த உம்மையும் என்னையும் இன்னும் ஏனை எல்லா உயிர் வருக்கங்களையும் அடிமையாக உடைய தலைவர் என்க; நம்மை - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

நயந்த - அன்புடன் செய்த; நயப்பு - மனமுருகிய அன்பு.

இம்மையிலும் - அம்மை மறுமைகளிலேயன்றி யிம்மையிலும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை, அம்மை மறுமைகளில் உடனிருந்து உய்தியைச் செய்பவர் என்பது மறுக்கலாகா உண்மையாதலின், அதுவேயன்றி, யிம்மையிலும் பிழைப்பது திருத்தொண்டின் காரணமேயாம் என்றார்.

என்போல்வாரும் தெளிய - மந்த மதிகளாய் அறிவு சுருங்கிய என்னைப் போன்றவர்களும். உம்மை இழிவுசிறப்பு. தன் முனைப்பு என்பது சிறிதுமின்றிச் சைவத்தின் "தாழவெனும் தன்மை" யை அணிகலமாப் பூண்டவர் அப்பூதியார் என்பது.

என்போல்வாரும் தெளியச் செம்மைபுரி - அறிவில்லா உலக மாக்களும் அறியும்படி செம்மை புரிந்த என்றது திருநாவுக்கரசர் சமணர்களின் தீய செயல்களையெல்லாம் சிவனடித்தொண்டின் திறம்போற்றியே வென்றுகாட்டிய செயல்களைக் குறித்தது. "ஈச னெந்தை யிணையடி நீழலே" என்றும், "ஒருவர் தமர்நாமஞ்சுவ தியாதொன்று மில்லை, அஞ்ச வருவது மில்லை" என்றும், "அடி பொருந்தக் கைதொழ, நற்றுணை யாவது நமச்சி வாயவே", "ஏத்தவல் லார்தமக்கிடுக்க ணில்லையே" என்றும், சொல்லியும் காட்டியும் செய்த செம்மைகளையே நினைவில் அழுந்தக்கொண்டு அப்பூதியார் கூறினர் என்க. மேல்வரும் பாட்டுப் பார்க்க. செம்மை - சிவமாம் தன்மை; புரிதல் இடைவிடாது மேற்கொள்ளுதல். "திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன்" என்று ஆளுடைய நம்பிகள் திருத்தொண்டத் தொகையினுள் இத்திறம்பற்றியே போற்