றியதும் காண்க. (1266 உரை பார்க்க). உலகம் கண்டுய்தற் பொருட்டே அரசுகளது வாழ்க்கை நிகழ்ந்தது என்பது. எழுத - எழுதியிடவும். வெம்மைமொழி - அதனை வேறொரு பேர் என்ற வெவ்விய மொழி. யான் கேட்க - மறைவானன்றி எதிரில் நானே காதுகொள்ளக் கேட்கும்படியாக. கேட்க நின்றது தமது தீவினை - துர்ப்பாக்கியம் - என்பது குறிப்பு. 14 1797. (வி-ரை.) பொங்குகடல் என்றும், கல் மிதப்பில் என்றும், போந்து என்றும், ஏறும் என்றும் தனித்தனி அச்செயலைப் பிரித்து எடுத்து விதந்து கூறியது ஒவ்வொன்றும் செயற்கரிய பெருஞ் செயல்களேயாக, அவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிகழச்செய்தது சொல்லற்கரிய பெருமையுடையதாகும் என்று காட்டுதற்கு. அவர் பெருமை என்றதனை விளக்கியவாறு. மிதப்பு - தெப்பம். அறியாதார் யாருளரே - இவ்வாறு தேற்றம்பட விளங்கும் மிகப் பெரிய தொன்றினை அறியாதார் ஒருவருமிலர் என்க. உளரே - வினா இன்மை குறித்தது. யாரும் என்ற முற்றும்மை தொக்கது. உளரே - உள்ளாராக இருக்க இயலாது என்பது. அங்கணர்தம் புவனம் - அங்கணராகிய சிவபெருமானால் உயிர்கள் ஈடேறும் பொருட்டுப் படைத்தளிக்கப்பட்ட 224 என்னும் புவனங்கள். புவனம் - சாதியொருமை. "உலகே ழினுநின்னன் னாமங்க ணயப்புற நண்ணுக" (1339) என்று இறைவர் அருளியமையால் எல்லா வுலகங்களும் அறிந்ததொன்றாம் என்பதும் குறிப்பு. சிவனடிமைத் திறத்தினில் வாராத வேற்றுப்புவனத்துள்ளாரே அவர் பெருமை யறியாதிருத்தல் கூடும் என்பதம் குறிக்க அங்கணர்தம் புவனத்தில் என்றார். மங்கலமாம் திருவேடத்துடன் நின்று - உமது திருவேடம் நீர் வேற்றுப்புவனத்தவரல்லர் என்று அறிவியா நிற்பவும் என்பது. நின்றும் - என்று உயர்வு சிறப்பும்மை தொக்கது. இவ்வகை - அத்திருவேடத்துடன் ஒவ்வாது அதற்கு மாறாகிய இவ்வாறு. மங்கலமாம் திருவேடம் என்றதனால், மொழிந்தது மங்கலத்துக்கு மாறாகியது. அமங்கல மொழி என்பது குறிப்பிற்பெறவைத்து அமங்கலத்தைத் திருவேடத்தார்பாற் சாரும்படி எடுத்துக் கூறாத மரபு காண்க. முன் "நள்றருளிச் செய்திலீர்" (1795) என்றதும் காண்க. ஏனாதியார் புராண உட்கிடையும் ஈண்டுக் கருதுக. எங்கு உறைவீர் - அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் இலராதலின், நீர் உறைவது வேறு எங்கும் எவ்விடம் என்றபடி. எம் குறைவு ஈர் - எமது குறைகளைப் போக்கும் என்று விண்ணப்பிக்கும் உண்மை தொனிப்பதும் காண்க. நீர்தாம் யார்? - எங்கு என்றதனால் ஊரும், யார் என்றதனால் பெயரும் வினாவியபடி. "ஊரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற், பேரென்னவோவுரையீர்" (திருக்கோவையார் - 56) என்ற அகத்துறை வினாக்களின் குறிப்பும் ஈண்டு வைத்துக் காண்க. மங்கலமாம்...மொழிந்தீர் - எங்கு உறைவீர்? - நீர்தாம் யார்? - இயம்பும் - என்று பலவும் மேன்மேல் அடுக்கி வினவிக் கூறியது வெகுட்சி முடுகிய தன்மையாலாகியது.அவ்வளவிலும் அத்திருவேடத்திற் கொண்ட அன்பு மாறாது கூறும் திறமும் காண்க. 1798. | திருமறையோ ரதுமொழியத், திருநாவுக் கரசரவர் பெருமையறிந் துரைசெய்வார் "பிறதுறையி னின்றேற அருளுபெருஞ் சூலையினா லாட்கொள்ள வடைந்துய்ந்த தெருளுமுணர் வில்லாத சிறுமையேன் யான்" என்றார். |
16 |