பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு *அழகியமணவாளதாச ரென்கிற திவ்வியகவி1 பிள்ளைப் பெருமாளை யங்கார், சோழநாட்டில் திருமங்கை யென்னுந் திருப்பதியில் பிராமணவரு ணத்தில்2 ஸ்ரீவைஷ்ணவசமயத்தில் அவதரித்து, நல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கணநூல்களையும் பழைய சங்கச்செய்யுள்களையும் அக்காலத்துவழங்கிய மற்றைநூல்களையும் ஐயந்திரிபற ஓதிஉணர்ந்து, இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி, மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவசமயத்திற்கு உரிய சம்பிரதாயக்கிரந்தங்க ளெல்லாவற்றையுங் கற்று அவற்றிலும் அதிநிபுணராய், அடக்கம்முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, ஆழ்வார்களருளிச்செயல்களில் ஆழ்ந்து ஈடுபடுபவராய், திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளியிருக்கின்ற நம்பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகட்கு மிக்கபக்திப்பேரன்புபூண்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர். அமருநாளில், அந்நாட்டில் ஆண்டுகொண்டிருந்த3 அரசன், அவரது நற்குணங்களனைத்தையும் அறிந்து, 'இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!' என வியந்து, அவரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து அவர்க்குத் தனது இராஜாங்ககாரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங் கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன். அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணுபக்தி விஞ்சிநின்றார். அப்பொழுது ஒருநாள், இராஜசம்ஸ்தானத்தில் உத்தியோகம்நடத்து கின்றவர்களின் நடுவே தாமும் உடனிருந்து காரியஞ்செய்துவருகிற அவர், தமதுதோளி லணிந்த உத்தரீயத்தை இரண்டுகையிலுங்கொண்டு 'கிருஷ்ண கிருஷ்ண' என்று தேய்த்தனர். அதுகண்ட பலரும் 'ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?' என வினவ, அவர், 'திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரி லெழுந்தருளித் திருவீதியிலுத்ஸவங்கண்டருளுகிறபோது அருகுபிடித்தகைப்பந்தத்தின் சுவாலை தாவியதனாற் பற்றியெரிகின்ற திருத்திரையை அவித்தேன்' என்றார். அது
* அழகியமணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம்; அப்பெருமானுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகியமணவாளதாச ரெனப் பெயர்பெற்றனர். 1. கிருஷ்ணனுடைய குழந்தைத் திருநாமமாகிய பிள்ளைப் பெருமாளென்னும் பெயரை இடப்பெற்ற ஐயங்கா ரென்று இப்பெயர்க்குப் பொருள்கூறுவர். ஐயங்காரென்பது, ஸ்ரீவைஷ்ணவப்பிராமணர்க்குக் குறியாக வழங்கும். 2. இவரை 'தென்கலைவைணவர்' என்பர், புலவர்புராண நூலுடையார். 3. இவ்வரசனைப் பெரியதிருமலைநாயக னென்பர் ஒருசாரார்; அது, காலக்கணக்குக்கு ஒத்துவராது. |