தித்துவரும்படி நியமித்து அனுப்பினான்; *அங்ஙனமே அவ்வரக்கர்பெரு மான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு இலங்கைநோக்கிச் செல்லும்பொழுது, இடைவழியில் உபய காவேரிமத்தியிலே பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலை நின்றருளினான்: அவ்வாறு திருமால் திருவுள்ளமுவந்து தங்கிய இடமே ஸ்ரீரங்க மெனப்படுவது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று திருமால்) திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிட மானதுபற்றி, 'ரங்கம்' என்று அவ் விமானத்திற்குப் பெயர்; திருமால் இங்கு ரதியை (ஆசைப்பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி, அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று 'அரங்கம்' என நின்றது; (நன்னூல் - பதவியல் - 21.) இங்கு 'அரங்கம்' என்பது - விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்). இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யுமிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு) க்கூத்துப்பயிலிடமாயிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேஉயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்கமென்னும் பெயர் வந்த தெனினுமாம். திரு என்பதற்கு - மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் - பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையுமாம். அரங்கத்தந்தாதி யென்ற தொடர் - அரங்கத்தினது சம்பந்தமான அந்தாதி யென்று விரித்து அரங்கத்தின்விஷயமான பிரபந்தமென்று பொருள்கொண்டு ஆறாம்வேற்றுமைத்தொகையாகவும், அரங்கத்தைப்பற்றிய அந்தாதியென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும் பொருளுந்தொக்க தொகையாகவும் உரைக்கத்தக்கது; அரங்கத்தின்மேற் பாடிய அந்தாதியென்று விரித்துப் பொருள்கொண்டு ஏழனுருபும்பயனுந்தொக்கதொகை யென்பாரும் உளர். திருவரங்கம் என்ற தொடரில், வகரவொற்று - உடம்படுமெய்; அரங்கத்தந்தாதி யென்ற தொடரில், அத்துச்சாரியையின் முதல்அகரம், மவ்வீறுஒற்றழிந்து நின்ற அகரத்தின் முன் கெட்டது. அந்தாதி - அந்தத்தை ஆதியாக வுடையது; அன்மொழித்தொகை; வடமொழித்தொடர், தீர்க்கசந்தி: அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது - முன்நின்றசெய்யுளின் ஈற்றி லுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி
* இராமபிரான், திருவவதாரத்தைமுடித்துக்கொண்டு தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, வந்து தன்னைவணங்கித் தனது பிரிவை யாற்ற மாட்டாது நின்ற விபீஷணனுக்கு இக்ஷ்வாகுகுலதெய்வமும் தனதுதிருவா ராதனமூர்த்தியுமான திருவரங்கநாதனைத் தந்தருளின னென வரலாறு கூறுதலு முண்டு. |