வாறு ஆறித் தனதுகாதலையும் தலைவிக்குப் புலப்படுத்த, அச்செயல்களை யெல்லாம் அவள் வேறுசில மகளிரைப் பிரிந்த ஆற்றாமையால் இவன்செய் கின்றன வெனக்கொண்டு சீற்றங்காட்டி உறவறப்பேச, முதலில் தலைவி நோக்கையும்பெறாதிருந்த அத்தலைவன், முகம்பார்த்து அவ்வளவு வார்த்தை பேசப்பெற்றதையே தாரகமாகக்கொண்டு, அவ்வார்த்தைகட்கு ஏற்றவிடை கள் சொல்லுகிறவியாஜத்தாற் பேச்சுவளர்த்திக்கொண்டே மேன்மேல்நெருங்கிக் கிளிபூவைகளோடுகொஞ்சிப்பேசுதல், அருகிற்கிடந்த அவளது விளையாட்டு மரப்பாவையை யெடுத்தல், அவள்கையிலுள்ள பாவையைத் தொட்டுப் பறித்தல், அங்குநில்லாமல் தோழியருடன் அப்பாற்செல்லப்புக்க அவளைக் கைகளால் வழிமறித்துத்தடுத்தல் முதலியன செய்து அவளை ஊடல்தணிக்க முயன்றவிடத்தும் அவள் சினந்தணியாள்போன்று தனது உள்ளக்காதலைப் புலனாகாதபடி மறைத்துக்கொண்டு அவனைப் புறக்கணித்துத் தோழியரோடு மணலிற் சிற்றிலிழைத்து விளையாடாநிற்க, இவளது கடைக்கண் பார்வையை ஏதேனும் ஒருவிதத்தாற்பெற்றுத் தான் உய்யலாமென்று பார்த்து அவன் இவளமைத்தசிற்றிலைத் தன்கால்களாற்சிதைக்க, அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்த்து அவனது கண்ணழகு முதலியவற்றால் நெஞ்சுருகி நிலைகலங்கியவளவிலும் அவள் முந்தின புலவியின் தொடர்ச்சியாற் சிறிது ஊடல்காட்டிப் பேசியது, இது. திருவாய்மொழியில் ஊடற் பாசுரமான "மின்னிடை மடவார்கள்" என்ற திருப்பதிகம் முழுவதும் இச்செய்யுட்கு மூலமாம். "பின்னும் அற்றிலை தீமை" என்றது - கிளிபூவைகளோடு கொஞ்சிப் பேசுதல், மரப்பாவையையெடுத்தல், கையிற்பாவைபறித்தல், வழிமறித்தல் முதலியவற்றைக் குறித்தது. "பொறுத்தோம்" என்றதை, உயர்வுபற்றிவந்த தனித்தன்மைப்பன்மை யென்றாவது, தோழியரையுங் கூட்டிச்சொன்ன உளப்பாட்டுத் தன்மைப்பன்மை யென்றாவது கொள்க. "ஆலினிலைமேல் துயில் வேங்கடவா" என்றது, பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை யெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு அறிதுயில்செய்தருள்கின்றன னென்ற வரலாறு பற்றி. இங்கு இதுகூறி விளித்தது, நினது செயற்கரியனசெய்யுந்திறம் விசித்திர மென்றவாறாம். "பெருவீட்டினைச் செய்தருள்" என்றது, இனி என்னைப் பிரியாது என்னுடன் என்றுங் கூடியிருந்து சிறந்த இல்வாழ்க்கையின்பத்தைத் தந்தருள்வாயென்று வேண்டுகிற குறிப்பாதலால், இது, ஊடல்தணிகிறநிலைமையில் நிகழ்ந்த பேச்சென்க. அற்றிலை - முன்னிலை யொருமை யெதிர்மறை யிறந்தகாலமுற்று; அறு - பகுதி. தொல்லை - தொன்மை; 'ஐ' விகுதிபெற்ற பண்புப்பெயர்; இது, பண்பாகுபெயராய், பழையநாளைக் குறித்தது. கன்று + இலை = கற்றிலை; மென்றொடர், வேற்றுமையில் வன்றொடராயிற்று. 'நன்று' என்றது, இங்கு, மரத்தின் இளமைப்பெயர்; இளமரம். பிரளயப்பெருங்கடலிற் புதி |