பக்கம் எண் :

748நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி

ஸ்ரீ

நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மங்களாசாசனஞ்செய்த நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளைப் பற்றிப் பாடிய அந்தாதித்தொடை யாலமைந்த நூல் என்பது பொருள். திருப்பதி - திருமால் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியிருக்குந் திவ்வியதலம். உகந்தருளிய நிலங்களாகையால், இவற்றிற்கு 'திரு' என்று அடைமொழி கொடுக்கப்பட்டது. 'திருப்பதி' என்பது - அத்தலங்களையும், அவற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களையுங் குறிக்கும்.

சிறப்புப்பாயிரம்.

ஏற்றமணவாளரிசைத்தாரந்தா திவெண்பா
தோற்றக்கேடில்லாததொன்மாலைப் - போற்றத்
திருப்பதியாநூற்றெட்டினையுஞ்சேவிப்போர்
கருப்பதியாவண்ணமுண்டாக.

(இ - ள்.) திருப்பதி ஆம் நூற்றெட்டினையும் - நூற்றெட்டுத் திருப்பதி களையும், சேவிப்போர் - சேவிப்பவர்கள், கரு பதியா வண்ணம் உண்டாக - (தமக்கு) மீண்டும் (தாயின்) கருப்பத்திற் பொருந்தாத விதம் உண்டாகுமாறு (மீண்டும் பிறப்பின்றி முத்தியைச்சேருமாறு), - தோற்றம் கேடு இல்லாத தொல் மாலை போற்ற - பிறப்பும் இறப்பு மில்லாத பழமையாகிய திருமாலைச் சொல்லித் துதிக்கும்படியாக, - ஏற்றம் மணவாளர் - சிறப்பினையுடைய அழகியமணவாளதாசரென்பவர், அந்தாதி வெண்பா - வெண்பாவினாலாகிய நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியை, இசைத்தார் - பாடியருளினார்; (எ - று.)

அடியவர்கள் திருமாலின் நூற்றெட்டுத்திருப்பதிகளையும் தாம் சேவிக் கக்கருதுங்காலத்தில் அத்திருப்பதிகளைப் பாடித் துதித்துப் பிறவித்துயர் தீர்ந்து மோக்ஷஸாம்ராஜ்யத்தைப் பெறும்படி அழகியமணவாளதாசரால் இந்நூல் அருளிச்செய்யப்பட்ட தென்பது, கருத்து. இதனால், இந்நூலின் சிறப்பும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையும் விளங்குதல் காண்க. சிறப்புப்பாயிரவிலக்கணங்களுள், "மணவாளர்' என்றதனால் ஆக்கியோன்பெய ரும் அந்தாதி வெண்பா என்றதனால் நூற்பெயரும் "வெண்பா என்றதனால் - யாப்பும், 'நூற்றெட்டினையும் சேவிப்போர் கருப்பதியாவண்ண முண்டாகத் தொன்மாலைப்போற்ற' என்றதனால் நுதலியபொருளும் பயனும் நூல்செய் தற்குக் காரணமும், இச்செய்யுளில் செம்பொருளாகவும் குறிப்புப்பொரு ளாகவும் விளங்குமாறு உணர்க.

சொல்நோக்கு பொருள்நோக்கு தொடைநோக்கு நடைநோக்கு முதலிய இனிய நோக்கங்கள்யாவும் அமைய ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நால்வகையிலும் திவ்வியகவிகளைப் பாடவல்ல புலவர்பெருமானாதலால், இவர்க்கு 'ஏற்றம்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. ஏற்ற மணவாளர் என்று பிரித்து - (எம்பெருமானது விஷயமான கவிகளைச் சொல்