| 26. திருநீலநக்க நாயனார் புராணம் தொகை |  | "ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்" | 
 - திருத்தொண்டத் தொகை வகை |  | "பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலுமஞ்சியூதித் துமிந்த மனைவியை நீப்ப, "வுப் பாலவெல்லாம்
 பேதித் தெழுந்தன கா"ணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
 நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்னெனும் வேதியனே"
 | 
  - திருத்தொண்டர் திருவந்தாதி (30) விரி | 1828. | பூத்த பங்கயப் பொகுட்டின்மேற் பொருகய லுகளுங்காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச்
 சாத்த மங்கையென் றுலகெலாம் புகழ்வுறுந் தகைத்தால்
 வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு.
 | 
 1 புராணம்:- திருநீலநக்கர் என்னும் பெயருடைய நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, திருநின்ற சருக்கத்தில் ஆறாவது திருநீலநக்க நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார். தொகை:- ஒலிக்கும் நீர் சூழ்ந்த திருச்சாத்த மங்கையில் அவதரித்த திருநீலநக்கருக்கு நான் அடியேன். -நாயனாரது நகரத்தை நீர்வளத்தால் அறிவிக்கின்றார். இதனால் சோழநாடு என்பதும் குறிப்பித்தபடி.  ஒலி புனல்சூழ் என்றது காவிரியினது கால்களினின்றும் வயல்களிற் பரந்து பாய்ந்து மெல்லென மிழற்றும் நீரின் ஒலியை. அயவந்தி நாயகரது திருமுன்பு அன்பின் மிகுதியினால் திருநீலநகக் நாயனார் அஞ்செமுத்துணர்வுறவிருநது முன்னவின்றதும், அப்போது மனைவியார் பெருமானது திருமேனியில் விழுந்த சிலம்பியை வாய்நீர்பட ஊதித்துமிந்த அன்பின் நீர்மையும் கொண்ட சரிதக்குறிப்பு. அன்றியும் நடுமனைவேதியின் பாங்கர்த் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தேவியாருடன் பள்ளிகொள்ளச்செந்தீ வலஞ்சுழித் தெழுந்த சரிதப் பகுதியை அன்பின் நீர்மை கலந்தெழும் யாழொலிக் குறிப்பிற் பெற வைத்தமையுமாம். ஆளுடைய பிள்ளையாருக்கும் உடன் வந்த பல்லாயிரம் அடியவர்க்கும் வளம்பெறத் திருவமுதூட்டும் சிறப்பும் பெருஞ் சோற்றுக் கம்பலையும் வரும் சரித நிகழ்ச்சிக்கும்  நீர்வளம் சாதனமாதலும் குறிப்பு. ஓசை என்னாது  ஒலி  என்ற குறிப்புமது.  நீலநக்கர் - நாயனாரது பெயர். வகை:- திருநீற்றை அணிந்த புயங்களையுடைய வராகிய சிவபெருமானது இலிங்கத் திருமேனிமல் சுதைச்சிலம்பி வீழ, அது கண்டு அஞ்சி மனைவியார் அதனை வாய்நீர் பட ஊதித் துமிந்து தவிர்க்க, அதுகண்டு அனுசிதம் செய்தனர் என்று மனைவியாரைத் தாம் நீத்துவிட, இறைவர், (தம் கனவில்) "துமிந்தபாலொ  |