பக்கம் எண் :


பாடல் விளக்க உரை1103

 

பிற்சேர்கை - 2 - A

1893 ஆம் பாடல் விளக்க உரை

ஆதிதேவர் - முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான்; தேவர்கள் அனைவர்க்கும் இறைவராக உள்ள மகாதேவர் என்றலுமாம். "ஆதி பகவன்" (திருக்குறள் 1) ஆதி - எல்லாவற்றுக்கும் தொடக்கமாகவும் கரணமாகவும் உள்ள பழைமையான இறைவர். "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (அரசுகள் தேவாரம் - திருவாலவாய் - திருத்தாண்டகம் 1); "ஆதீயுனக் காளரயினி அல்லேனெனலாமே" (நம்பிகள் தேவாரம் - இந்தளம் - திருவெண்ணெய் நல்லூர்); "அந்தம ஆதி என்மனார் புலவர்" (சிவஞான போதம் - சூத்திரம் 1).

எழுந்து அருள - கனவின்கண் வந்து நாயனார்க்கு, "ஆரூரில் பிறந்தார் எல்லாரும் ஞானமறையோர்; அவர்கள் அனைவரும் நம் கணங்களாவர்; அவ்வுண்மையை நீ அறிவாயாக", என்று உணர்த்தி யருளியபின் மறைந்தருளினாராக. தாம் கனவிற் காட்டிய வடிவத்தைச் சொரூப நிலையுள் மறைத்தருள.

அருள - இறைவர் அவ்வாறு திருவுருக் கரந்ததும் அருளிப்பாடே யாகும். இன்றெனில் கனவில் தோன்றி நிற்கும் அந்நிலையையே நாயனார் கண்டு தொடர்ந்து இன்புற்றிருக்க, இரவுப் பொழுது முழுதும் கழிந்துபோம். நாயனார், அன்றிரவு தம ஆன்மநாயகரை அருச்சித்துப் பூசிக்கும் நியதியினின்றும் வழுவி யிருப்பர். கனவில் இறைவரைக் கண்டு போற்றுதலும் பூசனையே என்னும்; நாயனார் கனவு நனவு இரண்டிலும் பூசனைபுரியும் பேறு பெறுதல் வேண்டுமென்று இறைவர திருவுள்ளம் பற்றினாராகலின், கனவினின்றும் மறைந்தார். அவ்வாறு மறைந்தது அருளிப்பாடே என்றவாறு.

அருள உணர்ந்தார் - என்று கூட்டியுரைத்து "நாயனார் உணர்தல் வேண்டும் என்று இறைவர் திருவுள்ளம் பற்றினாராகலின் நாயனார் உணர்ந்தார் எனலும் அமையும். ஆன்மாக்கள் உணர்தல் இறைவர் அருளினாலன்றி அமையாதாம். "காண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே" (அரசுகள் தேவாரம் - தனித் திருத்தாண்டகம் 3). "அவன் அருளாலே அவன்றாள் வணங்ஙகி" (திருவாசகம் - சிவபுராணம் - 18). "காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" (சிவஞானபோதம் - சூத்திரம் 11).

ஏதம் நினைந்தேன் - ஏதம் - இரவில் உரிய காலத்தில் ஆன்ம நாயகரைப் பூசிக்காமல் காலந்தாழ்ந்த நினைந்த ஏதமும், திருவாரூரில் பிறந்த "ஞானமறையோரும் சிவகணங்களுமாகிய" புனிதப்படுத்தும் அடியார் கூட்டத்தை இழிவு தொடக்கும் கூட்டமாக நினைந்த ஏதமுமாம்.

அஞ்சி - சிவாபராதமாகிய ஏதம் செய்ய இருந்ததனை நினைந்து அச்சமடைந்து. திருவாசகம் - அச்சப்பத்து முழுதும் பார்க்க. "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்" (திருக்குறள் 428).

எழுந்தபடியே வழிபட்டு - நீராடித் தூய்மை செய்து கொள்ளாதது மட்டுமன்றித் துயிலுணர்ந்து எழுந்ததும் முகம் கை கால்களைக் கூட நீரால் தூய்மை செய்துகொள்ளாமல் விழித்தெழுந்த அந்நிலையிலேயே வழிபாடு தொடங்கி