பக்கம் எண் :


அருஞ்சொற்றொடர்775

 


அருஞ்சொற்றொடர்


அணியார்

1545-

அணிமையில் உள்ளவர்

அடையாளக் குறிகள்

1562-

அதிகரித்தல்

1316-

மிகப் பயிலுதல்

அத்தம்

1623-

காடு

அமுத ஞானம்

1448-

இறப்பைத் தவிர்க்கும் ஞானம் - சிவஞானம்

அம்பர தலம்

1429-

வானவெளி

அல்லாகும் பொழுது

1322-

இரவு

அவம் புரிதல்

1338-

தகாதவை செய்தல்

அற்றவுணர்வு

1485-

வேறொன்றிற் செல்லுதல் தவிர்ந்த உணர்ச்சி - தன் உணர்வு அற்றநிலை என்றலுமாம்

ஆடி

1274-

கண்ணாடி

ஆதரவு

1554-

அன்பு

ஆழிவலவன்

1515-

ஆழி - சக்கரம்; சக்கர மேந்திய திருமால். ஆழி - கடல் என்று கொண்டு கடலரசன் என்றலுமாம்

இக்கு

1423-

கரும்பு

இடருழத்தல்

1474-

மனம் வருந்துதல்

இலச்சினை

1415-

முத்திரை - குறி - அடையாளம்

1418-

இலம்பாடு

1520-

பொருள்கள் இல்லாமை

இளநிலா

1441-

பிறை

இறை வழுவுதல்

1314-

சிறிது தவறுதல்

இறைகொள்ளப் பெற்ற

1467-

விடைதரப் பெற்ற; இறை பெரியோரிடமிருந்துவரும் விடை. "இறை நல்குமின்" (திருஞான - தேவாரம் கொல்லி - கண்டியூர்)

உடனாகுதல்

1508-

வேறுமன்றி - ஒன்றுமன்றி - உடனாயிருக்கும் கலப்பு

உரன்

1666-

மனத் திண்மை

உறைப்பு

1390-

உறுதி

ஊட்டுவான்

1320-

சமயல் செய்தளிக்கும் ஏவலாளன்

எண் பெருகுதல்

1658-

மன மூறிப் பொங்குதல்

1665-

எதிர்செய் குறை

1338-

கைம்மாறு

ஒக்கல்

1281-

சுற்றம்

ஒருப்படுதல்

1495-

மனமொன்றித் துணிதல்

கடன் கழித்தல்

1296-

கடமையைச் செலுத்துதல்

கடற்கொழுந்து

1439-

கடலலையின் நுனி

கடை காவலுடையார்

1352-

வாயில் காப்போர்

கட்டழித்தல்

1656-

நிலை குலையச்செய்தல்

கரண்டம்

1498-

நீர்க் காக்கை

கருநாமம்

1599-

பிறவியில் வரும் பெயர் - பிறவியச்சம் என்றலுமாம்

களங்கொள்

1602-

கழுத்தினடியாகப் பிறக்கும்

காலங்கள்

1491 - 1504-

இறைவரது பாரார்த்த பூசைக்குரிய காலங்கள்

காலம் தவறு

1527-

காலத்தால் நேரும் வறுமை

குமைத்தல்

1459-

அழித்தல்

குறி

1624-

கொள்கை

குறி

1624-

குறிக்கோள் - இலட்சியம்

குறிப்பு

1629-

கருத்து ஊன்றிய பொருள்

குறைகொள்ளுதல்

1467-

விண்ணப்பித்தல்

குறைந்தடைதல்

1310-

குறைவறுத்தல்

1512-

வேண்டுவன எல்லாம் செய்து தருதல் - எதனாலும் குறையில தாகச் செய்தல்

கூவல்

1466-

கிணறு

கைக்குலவரை

1378-

யானை

கைதவம்

1689-

கீழ்மைச் செயல்

கோள்

1329-

நற்கொள்கை

சமய லங்கனம்

1348-

சமய நீக்கம்

சழக்கு

1551-

குற்றம்

சாரிகை

1685-

சிவம்

1427-

சிவத்தன்மை - செம்மை; மங்கலம் என்றலு மாம்

1442-

1448-

சீர்ப்பாடு

1276-

சிறப்பு

சுருதி

1684-

சுதி என்ப. நூல் என்றலுமாம்

செந்நெறி

1306-

சிவநெறி

செவ்வி

1545-

சமயம் - உரியகாலம்

ஞிமிறு

1270-

வண்டு