உ
கணபதி துணை.
கபிலர் அகவல் -----
நான்முகன் படைத்த நானாவகையுலகில் ஆன்றசிறப்பின் அரும்பொருள் கூறுங்கால் ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றியலிமுதிதோ நாண்முதிதோ கோண்முதிதோ நல்வினைமுதிதோ தீவினைமுதிதோ செல்வஞ்சிறப்போ கல்விசிறப்போ அல்லதுலகில் அறிவுசிறப்போ தொல்லைமாஞாலந் தோற்றமோ படைப்போ எல்லாப்பிறப்பும் இயற்கையோ செயற்கையோ காலத்தாற்சாவரோ பொய்ச்சாவுசாவரோ நஞ்சுறுதீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
|