அவ்விருசாதியில் ஆண்பெண்மாறிக் கலந்துகருப்பெறல் கண்டதுண்டோசொலும் ஒருவகைச்சாதியா மக்கட்பிறப்பிலீர் இருவகையாகநீர் இயம்பியகுலத்துள் ஆண்பெண்மாறி அணைதலுமணைந்தபின் கருப்பொறையுயிர்ப்பதுங் காண்கின்றிலீரோ எந்நிலத்தெந்தவித் திடப்படுகின்றதோ அந்நிலத்தந்தவித் தங்குரித்திடுமலால் மாறிவேறாகும் வழக்கமொன்றிலையே பூசுரர்ப்புணர்ந்து புலைச்சியரீன்ற புத்திரராயினோர் பூசுரரல்லரோ பெற்றமுமெருமையும் பேதமாய்த்தோன்றல்போல்
|