பக்கம் எண் :

100ஆத்மாநாம் படைப்புகள்

பூஜை

குங்குமச் சிகப்பில் மூழ்கின
உயிர்க்கரு பீஜங்கள்
கரும்புள்ளிகள் தோன்றும்
சாம்பற் பச்சையுடல்
வயிறு வெடிக்கச் சிரிக்கும்
பூசணிகள் நடுத்தெருவில்
ஆயுதங்கள் வாகனங்கள்
மாலைத் திலகம் அணிய
இங்கு ஆயுத பூஜை