சாளரம் இருளையே பார்த்துப் பார்த்து வந்த கண்கள் இருண்டு பெருத்து வறண்டுவிட்டன ஒரு சின்ன ஒளிக்கீற்று வந்தாலும்கூட பெருந்தவம் செய்து கிடைத்த வரமாய் அலைபாயத் துவங்கின ஒரு கணத்தின் கணமெனத் தோன்றிய ஒளிக்கீற்று சலிப்புற்று உன் அகோரப் பசிக்கு என்னை உணவாக்காதே எனப் பதுங்கிச் சென்றது எங்கு தேடியும் கிடைக்காத ஒளிக்கீற்றை எண்ணி உள் ஆழம் எங்கும் தேடத் துவங்கிற்று அற்பக் கண் காரிருளை எதிர்கொண்டு வெளி இருளே மேலென்று வெளிப்பரப்பில் ஆயத்துவங்கிற்று அண்டத்தின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த ஒளிக்கீற்றின் கனவுச் சாபத்தால் உடம்பெல்லாம் கண்ணாகி |