கவிதை தலைப்பிடப்படாதது இந்தக் கவிதை எப்படி முடியும் எங்கு முடியும் என்று தெரியாது திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும் இது முடியும்போது இருக்கும் (இருந்தால்) நான் ஆரம்பத்தில் இருந்தவன்தானா ஏன் இந்தக் கேள்வி யாரை நோக்கி இன்றிரவு உணவருந்தும் நம்பிக்கையில் இங்கிருப்பேன் இப்படியும் ஓர் நம்பிக்கை இருந்த நேற்று எனக்கிருண்ட கணங்கள் அவற்றின் தவளைக் குரல்கள் கேட்கும் அடிக்கடி அதனை ஒதுக்கத் தெரியாமல் தவிக்கையில் நிகழ்ச்சியின் சப்தங்கள் செவிப்பறை கிழிக்கும் நாளை ஓர் ஒளிக்கடலாய் கண்ணைப் பறிக்கும் இருதயம் இதோ இதோ என்று துடிக்கும் |