அழைப்பு இரண்டாம் மாடியில் - உப்பரிகையில் ஒற்றைச் சன்னல் அருகில் நான் என்னோடு உணவருந்திக்கொண்டு அருகில் வேப்பமரக்கிளை மீதிருந்த காகம் அழைத்தது பித்ருக்களோ தேவர்களோ என எண்ணி ஒரு சிறு கவளச் சாதத்தை வெளியே வைத்தேன் சாதம் சாதமாக காகம் பறந்துவிட்டது யாருடைய பித்ருக்களோ நானறியேன் |