பழக்கம் எனக்குக் கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருந்தேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் |