பக்கம் எண் :

202ஆத்மாநாம் படைப்புகள்

பெர்டோல்ட் ப்ரெக்ட்
பின் அவன் ஒப்பீடு செய்யவில்லை

பின் அவன் ஒப்பீடு செய்யவில்லை அவர்களை
மற்றவர்களுடன்
தன்னையோ
மற்றொருவருடன், ஆனால்,
தன்னையே அச்சுறுத்த இயலாத் தூசியாக
உடன் உருமாறுவதாய்
அச்சுறுத்தினான். பின்
அனைத்துப்
பின் நிகழ்வுகளுக்கும், நடத்தினான்
ஏதோ ஒத்துப்போனது போல ஒப்பந்தம் ஒன்றை
நிறைவேற்றுவதென. அழிந்தது
அவன் உள் ஆழத்தில்
எல்லா ஆசைகளும்.
ஒவ்வொரு அசைவிலும்
அவன் தனக்குத்தானே செய்யக் கூடாதெனக்
கண்டித்துக்கொண்டான்
அவனது எண்ணங்களும் உணர்ச்சிகளும் சுருக்கிக்கொண்டு
மறைந்தன,
விளக்கவுரை தவிர
அவன் தட்டிக்கழித்த வெற்றுக்காகிதம் போல்

ஜெர்மன் மூலம் : பெர்டோல்ட் ப்ரெக்ட
பெங்குவின் வெளியிட்டுள்ள Poetry of
the Commited Individual என்ற தொகுப்பிலிருந்து
(கவனம் இதழ் 7 மார்ச் 1982
ஆசிரியர் ஞானக்கூத்தன்)