சி. நாராயணரெட்டி *எவரின் கையெழுத்துக்கள் இவை? எங்கே பழைய கடல் மூச்சிரைக்கிறது எங்கே வைகறை தொற்றிக்கொண்டிருக்கிறது இங்கே மணலில் பதிந்த காலடிகள் எவரின் கையெழுத்துக்கள் இவை? எங்கே எவரின் கண்களும் அலையவில்லையோ எங்கே எவரின் பாதங்களும் படவில்லையோ இங்கே குதிகாலின் பதிவுகள் சேற்றில் பதிந்து எவரின் கையெழுத்துப் பிரதிகள் இவை? எங்கே அரசு வன்முறையைக் கைக்கொள்கிறதோ எங்கே ரத்தம் எதிர்க்கிறதோ இங்கே எரியும் காலடித்தடங்கள் காடுகளில் எவரின் கையெழுத்துப் பிரதிகள் இவை? தெலுங்குமூலம் : சி. நாராயண ரெட்டி *சி. நாராயண ரெட்டியின் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பு மட்டும் மீட்சி 1, (ஆகஸ்ட், 1983) ஆம் இதழில் வெளிவந்தது. |