பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்267


ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் அடங்கிய முழுடையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள்இதில் இடம்பெற்றுள்ளன.

1984ஆம் ஆண்டு வயதில் அகால மரணமடைந்த ஆதமாநாமின் படைப்புகள்தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள்முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒருஅபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம்.

பதிப்பாசிரியர் பிரம்மராஜன் பல ஆண்டு கால முயற்சியில் உருவாகியுள்ளதொகுப்பு இது.