பக்கம் எண் :

38ஆத்மாநாம் படைப்புகள்

தலைப்புகள் தானே வரும்

நினைத்து
வெகு காலமாகிவிட்டது
போல் இருக்கிறது
உன்னை
எனக்குள் இருக்கும்
மூளைச் செதில்களைத் தின்றுவிட்டு
எங்கே பதுங்கி இருந்தாய்

எப்போதுமே நேரெதிராய்
புரிந்துகொள்ளும் சுபாவமெனக்கு
என்பதைத்
தெரிந்துகொண்டதாலா

குசலங்களை விட்டுவிட்டு
விஷயத்திற்கு வருவோம்

நாம் கடைசியாய்ச் சந்தித்தபோது
இயக்கங்கள் பற்றி
பேசியதாய் நினைவு
இப்பொழுது தெரிகிறதா
இருப்பது ஒரே இயக்கம் என்று
சந்திப்போம்

நினைத்து
வெகு காலமாகிவிட்டது
போல் இருக்கிறது