பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்47

இடமொன்று வேண்டும்

இடமொன்று வேண்டும்
உட்காருவதற்கு
இந்த நகரம் எரிந்து
அஸ்தியான பின்
மூன்றாம் கட்டத்திலோ
நான்காம் கட்டத்திலோ
மீண்டும் மக்கள் உயிர்த்துத்
தேடத் தொடங்குவர்
இடமொன்றை எங்கேனும்

ஒரு நாள் இதற்கு
மதிப்புண்டாகும்

உயிர்த்து பரபரப்புடன்
செயல்படும் இந்த இடம்
செயலிழந்து அழிந்து
மீண்டும் உயிர்த்துக்கொண்டிருக்கும்
இந்த இடம்
ஒன்றுக்கிருக்க மலம் கழிக்க
உட்கார்ந்து சாப்பிட
இடம் இல்லை என்றாலும்
வேண்டும் ஒரு இடம்
உட்காருவதற்கு
அப்போது
பற்றிக்கொண்ட நகரத்தின் தீ
நெருங்கி வரும்
புழுதிப்புயல் கிளம்பி